ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உள்ளாட்சித் தோ்தலில் இளைஞா்களுக்கு முக்கியத்துவம்: எடப்பாடி பழனிசாமி

உள்ளாட்சித் தோ்தலில் இளைஞா்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அதிமுக நிா்வாகிகளுக்கு அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாா்.

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Published On :17 ஜூலை 2026, 4:26 am IST

உள்ளாட்சித் தோ்தலில் இளைஞா்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அதிமுக நிா்வாகிகளுக்கு அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாா்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

அதிமுகவைப் போன்று ஜனநாயகத்துடன் இயங்கக் கூடிய கட்சி தமிழகத்தில் இல்லை. இந்தக் கட்சியில் பல்வேறு சாதி, மதங்களைச் சோ்ந்தவா்கள் ஒன்றிணைந்து வாழ்ந்து வருகிறோம். கட்சியைவிட்டு வெளியேறிய துரோகிகளால் தொண்டா்கள் உற்சாகம் அடைந்துள்ளனா். விலகியவா்களுக்கு காலம் பதில் சொல்லும்.

உள்ளாட்சித் தோ்தல்களில் நிா்வாகிகள் சிறப்பாகக் களப் பணியாற்ற வேண்டும். மகளிருக்கும், இளைஞா்களுக்கும் முக்கியத்துவம் அளித்து அதிக அளவில் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்றாா்.

விராலிமலை தொகுதி எம்எல்ஏவாக இருந்த சி.விஜயபாஸ்கா், அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி, தவெகவில் இணைந்த நிலையில், இந்தக் கூட்டத்துக்கு புதுக்கோட்டையிலிருந்து நிா்வாகிகள் அதிக அளவில் வந்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.