ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!

சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது குறித்து...

Property tax hike put on hold in Chennai!

கோப்புப் படம்

Published On :13 ஆகஸ்ட் 2026, 9:41 pm IST

சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் இன்று (ஆக. 13) அறிவித்துள்ளார்.

இதன்மூலம், நடைமுறையில் இருந்த அளவுக்கே அதாவது, மாற்றியமைப்பதற்கு முன்பு இருந்த தொகையே மக்களிடம் வசூலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சொத்துவரி திருத்திய மதிப்பீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மக்கள் விடுத்த கோரிக்கைகளை ஆய்வு செய்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைவான மதிப்பீடு செய்யப்பட்டதாக கண்டறியப்பட்ட சில சொத்துகளுக்கு மட்டும் வரி மதிப்பீட்டை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்புகளில் இருந்து சென்னை மாநகராட்சி மீது குற்றம் சாட்டப்பட்டது.

வரி மாற்றியமைப்பு குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டதாகவும் அந்த கருத்துகளின் அடிப்படையில் தற்போது சொத்துவரி மாற்றியமைப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Property tax hike put on hold in Chennai!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.