ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! இன்றுமுதல் எங்கே முறையிடலாம்?

சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு குறித்து எங்கே முறையிடலாம்?

Chennai Corporation

சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்

Published On :13 ஆகஸ்ட் 2026, 9:13 am IST

சென்னையில் வீடுகள், கட்டடங்களுக்கான சொத்து வரி 4 மடங்கு வரையில் அதிகரித்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, மண்டல அலுவலகங்களில் புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

சென்னையில் உள்ள வீடுகள், கட்டடங்களுக்கான சொத்து வரி 3 முதல் 4 மடங்கு வரை அதிகரித்திருப்பதாகவும், எந்த வித காரணமும் இன்றி, முறையான முன்னறிவிப்பும் இன்றி திடீரென சொத்து வரியைப் பல மடங்கு உயர்த்தியிருப்பதை ஏற்க முடியாது என்றும் இணையத்தில் மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

உதாரணமாக, சென்னை அண்ணா நகரில் கடந்த ஆண்டு ரூ. 5,000 சொத்து வரி செலுத்தப்பட்ட கட்டடத்துக்கு, இந்தாண்டு ரூ. 28,000 விதிக்கப்பட்டுள்ளதாக் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனையடுத்து, சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகள் சொத்து வரிகள் உயர்த்தப்படவில்லை என்று விளக்கமளித்த மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன், திருத்தப்பட்ட வரி மதிப்பீட்டில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், அறிவிப்பைப் பெற்ற 15 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட மண்டல துணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், அத்தகைய மேல்முறையீடுகள் 30 நாள்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்றும் ஜி.எஸ். சமீரன் கூறியுள்ளார்.

இதன்படி, சொத்து வரி மதிப்பீடு தொடர்பான ஆட்சேபனைகள் இருப்பின், மாநகராட்சி வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் நேரடியாக அல்லது மின்னஞ்சல் மூலமாக இன்றுமுதல் தெரிவிக்கலாம்.

சென்னை வடக்கு மண்டலங்கள் (1 முதல் 5)

மண்டலம் 1: திருவொற்றியூர்

மண்டலம் 2: மணலி

மண்டலம் 3: மாதவரம்

மண்டலம் 4: தண்டையார்பேட்டை

மண்டலம் 5: ராயபுரம்

சென்னை வடக்கு மண்டலத்தில் இருப்போர், பேசின் பிரிட்ஜ் அலுவலகத்தில் நேரடியாக அல்லது rdcnorth2013@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகத் தெரிவிக்கலாம்.

மத்திய சென்னை மண்டலங்கள் (6 முதல் 10)

மண்டலம் 6: திரு. வி. க. நகர்

மண்டலம் 7: அம்பத்தூர்

மண்டலம் 8: அண்ணா நகர்

மண்டலம் 9: தேனாம்பேட்டை

மண்டலம் 10: கோடம்பாக்கம்

மத்திய சென்னை மண்டலத்தில் இருப்போர், செனாய் நகர் அலுவலகத்தில் நேரடியாக அல்லது rdccentral@chennaicorporation.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகத் தெரிவிக்கலாம்.

சென்னை தெற்கு மண்டலங்கள் (11 முதல் 15)

மண்டலம் 11: வளசரவாக்கம்

மண்டலம் 12: ஆலந்தூர்

மண்டலம் 13: அடையாறு

மண்டலம் 14: பெருங்குடி

மண்டலம் 15: சோழிங்கநல்லூர்

சென்னை தெற்கு மண்டலத்தில் இருப்போர், அடையாறு அலுவலகத்தில் நேரடியாக அல்லது rdcsouth@chennaicorporation.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகத் தெரிவிக்கலாம்.

Summary

Has property tax in Chennai increased fourfold?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.