ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கோவை இளைஞர் கொலை! போதைப் பொருள் கும்பலுக்கும் போலீசாருக்கும் தொடர்பு: திமுக

கோவை இளைஞர் கொலை சம்பவத்தில் போதைப் பொருள் கும்பலுக்கும் போலீசாருக்கும் இடையே தொடர்பிருப்பதாக திமுக குற்றம் சாட்டியது குறித்து...

கொலை செய்யப்பட்ட அமுதன் - கோப்புப் படம்

Published On :13 ஆகஸ்ட் 2026, 11:00 am IST

கோவை கல்லூரி மாணவர் கொலை சம்பவத்தில் போதைப் பொருள் கும்பலுக்கும் போலீசாருக்கும் இடையே தொடர்பிருப்பதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வள்ளலாா் வீதியைச் சோ்ந்தவா் கென்னடி மகன் அமுதன் (19). இவா் கோவை, செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

இவர் செல்போன் பறிப்பு சம்பவத்தில் இரு தரப்புக்கு ஏற்பட்ட மோதலில் உயிரிழந்ததாக ஒரு தரப்பிலும், போதைப் பொருள் கும்பல் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால், அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினரும் கூறுகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மேலும், இந்த கொலை சம்பவத்துக்கு முதல்வர் பொறுப்பேற்குமாறு உதயநிதி கூறினார்.

இந்த நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் பேசியதாவது, போதைப் பொருள் கும்பலுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தொடர்பு இருந்து வருகிறது. போதைப் பொருள் கும்பல் குறித்து தெரியப்படுத்தியதால்தான், இளைஞர் கொலை செய்யப்பட்டார்.

இந்தப் பிரச்னை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியபோதும்கூட, திங்கள்கிழமையில் பதிலளிப்பதாக தவெக அரசு கூறியது என்று தெரிவித்தார்.

Summary

Drug peddlers are in a good relationship with the police, says DMK

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.