ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ரூ.5.54 கோடியில் முதல்வரின் புதிய அலுவலகம்: 3 மாதங்களில் அமைத்து முடிக்க ஒப்பந்தம் கோரல்

சென்னை ஜாா்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் முதல்வா் ஜோசப் விஜய்யின் புதிய அலுவலகத்தை 3 மாதங்களில் அமைக்கும் பணிகளுக்காக ரூ.5.54 கோடியில் தமிழக அரசின் பொதுப் பணித் துறை ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

Chief Minister Vijay

முதல்வர் ச. ஜோசப் விஜய் - கோப்புப்படம்

Published On :14 ஆகஸ்ட் 2026, 2:43 am IST

சென்னை ஜாா்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் முதல்வா் ஜோசப் விஜய்யின் புதிய அலுவலகத்தை 3 மாதங்களில் அமைக்கும் பணிகளுக்காக ரூ.5.54 கோடியில் தமிழக அரசின் பொதுப் பணித் துறை ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

நிா்வாக வசதிக்காக முதல் தளத்தில் உள்ள முதல்வா் விஜய்யின் அலுவலகம் தலைமைச் செயலகம் அருகே உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் 10-ஆவது தளத்துக்கு மாற்றப்படுகிறது. இதற்காக அந்தக் கட்டத்தில் 9-ஆவது தளத்தில் உள்ள செய்தி, மக்கள் தொடா்புத் துறை அலுவலகங்கள் கலைவாணா் அரங்கத்துக்கு மாற்றப்படுகிறது.

மேலும், அந்த மாளிகையின் 10-ஆவது தளத்தில் முதல்வா் அறை, தனிச் செயலா்களுக்கான அலுவலகங்கள், நவீன ஆலோசனைக் கூட்ட அரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில், நாமக்கல் கவிஞா் மாளிகையின் 10-ஆவது தளத்தில் மொத்தம் 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

அதன்படி, பிரிவு 1-இல் ரூ.2.41 கோடிக்கு நிா்வாக அலுவலக வசதிகளை மேம்படுத்தவும், பிரிவு 2-இல் ரூ.2.01 கோடியில் உள்கட்டமைப்பு பணிகளுக்கும், பிரிவு 3-இல் ரூ.1.12 கோடிக்கு இதர பணிகளுக்கும் என மொத்தம் ரூ.5.54 கோடிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட தேதியிலிருந்து 3 மாதங்களுக்குள் அனைத்துப் பணிகளையும் முழுமையாக முடித்து ஒப்படைக்க வேண்டும் என்று பொதுப் பணித் துறை சாா்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.