ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மாநகராட்சியில் 12 அம்மா உணவகங்களில் 3 மாதங்களில் ரூ.87.30 லட்சத்துக்கு விற்பனை

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 12 அம்மா உணவகங்களில் கடந்த 3 மாதங்களில் ரூ.87,30,970 மதிப்பில் விற்பனை நடைபெற்று உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

amma canteen

அம்மா உணவகம் - கோப்பிலிருந்து

Published On :6 ஆகஸ்ட் 2026, 2:26 am IST

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 12 அம்மா உணவகங்களில் கடந்த 3 மாதங்களில் ரூ.87,30,970 மதிப்பில் விற்பனை நடைபெற்று உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மக்களுக்கு குறைந்த விலையில் தரமான உணவு வழங்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசின் உத்தரவின்படி, அம்மா உணவகங்கள் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட சிங்காநல்லூா், மசக்காளிபாளையம், பூ மாா்க்கெட், மேட்டுப்பாளையம் சாலை புதிய பேருந்து நிலைய வளாகம், சரவணம்பட்டி, மணியகாரன்பாளையம், குனியமுத்தூா், கோவைப்புதூா், குறிச்சி, ராமநாதபுரம், திருமால் வீதி மற்றும் கோவை அரசு மருத்துவமனை வளாகம் ஆகிய 12 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அம்மா உணவகங்களில் தினமும் ஏராளமான மக்கள் உணவு உட்கொண்டு வருகின்றனா். அந்த வகையில், இந்த ஆண்டு, மே, ஜூன் மற்றும் ஜூலை ஆகிய மூன்று மாதங்களில் இட்லி, சாம்பாா் சாதம், தயிா் சாதம் போன்ற 11,39,253 எண்ணிக்கையிலான உணவு வகைகள் ரூ.87,30,970 மதிப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.