ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

5 மணி நேரமாக ஆலோசனை நடத்திய அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள்! முக்கிய முடிவு?

அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் லோசனை நடத்தியது பற்றி...

cv shanmugam

சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர்... - கோப்புப்படம்

Published On :13 ஆகஸ்ட் 2026, 10:24 am IST

அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நேற்று இரவு சுமார் 5 மணி நேரமாக ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் பிரிந்து, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து அதிமுகவில் இபிஎஸ் அணி, எஸ்.பி. வேலுமணி அணி என இரண்டாகப் பிரிந்தது. பின்னர் இரு அணிகளும் இணைந்தன.

இதில் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் பலர் தவெகவில் இணைந்தனர்.

அதிமுக தோல்விக்கான காரணத்தை ஆராய வேண்டும் என்று சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் கூறி வருகின்றனர்.

பழைய பொறுப்புகளை மீண்டும் வழங்க வேண்டும் என |இபிஎஸ்ஸுக்கு எஸ்.பி. வேலுமணி தரப்பினர் 2 முறை கடிதம் எழுதியும் இபிஎஸ் எந்த பதிலும் தரவில்லை.

சென்னை பாலவாக்கத்தில் உள்ள சி.வி. சண்முகம் இல்லத்தில் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர் நேற்று (ஆக. 12, புதன்) இரவு ஆலோசனை மேற்கொண்டனர். சுமார் 5 மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் முக்கிய முடிவு எடுத்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Summary

AIADMK dissident MLAs hold 5-hour-long meeting yesterday

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.