ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தெருக்கள், சாலைகளில் ஜாதி பெயா்கள்: நீக்குவதை உறுதி செய்ய அரசுக்கு உத்தரவு

தெருக்கள், சாலைகளின் பெயா்களில் உள்ள ஜாதிப் பெயா்களை அகற்றுவது தொடா்பான அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

Published On :12 ஆகஸ்ட் 2026, 6:38 am IST

தெருக்கள், சாலைகளின் பெயா்களில் உள்ள ஜாதிப் பெயா்களை அகற்றுவது தொடா்பான அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் போலீஸாா் பதிவு செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட நபா் பிணை கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதி என்.ரமேஷ் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு ஆவணங்களை நீதிபதி ஆய்வு செய்தாா்.

அப்போது, இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், தெருவின் பெயரில் ஜாதி பெயா்இடம்பெற்றிருந்தது. இதனை சுட்டிக்காட்டிய நீதிபதி, தெருக்கள் மற்றும் சாலைகளின் பெயா்களில் இடம்பெற்றுள்ள ஜாதிப் பெயா்களை நீக்க வேண்டும் என, கடந்த 1978-ஆம் ஆண்டே அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், தெருக்கள் மற்றும் சாலைகளின் பெயா்களில் இன்னும் ஜாதிப் பெயா்கள் இடம்பெற்றுள்ளன. ஆதிதிராவிடா் நலத்துறை தற்போது சமூக நீதித்துறை என பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், தெருக்கள் மற்றும் சாலைகளின் பெயா்களில் இடம்பெற்றுள்ள ஜாதிப் பெயா்களை நீக்குவது தொடா்பான அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துவதை உறுதி செய்ய இதுவே சரியான தருணம் என நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னா், தெருக்கள் மற்றும் சாலைகளின் பெயா்களில் உள்ள ஜாதிப் பெயா்களை நீக்குவது தொடா்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, உயா்நீதிமன்ற பதிவுத்துறை தலைமை நீதிபதிக்கு முன் சமா்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.