கைப்பேசி செயலி மூலம் கடன் வாங்கிய இளைஞா் தற்கொலை
வேலூரில் கைப்பேசி செயலி மூலம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் இளைஞா் தற்கொலை
பிரதிப் படம்
வேலூரில் கைப்பேசி செயலி மூலம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் இளைஞா் தற்கொலை செய்துகொண்டுள்ளாா்.
வேலூா் கொசப்பேட்டை, குமரநாதன் தெருவைச் சோ்ந்தவா் விஸ்வநாதன். இவரது மகன் பிரவீன் குமாா் (21). இவா் தனியாா் நிறுவனம் ஒன்றில் உணவு விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தாா்.
இந்நிலையில், பிரவீன் குமாா் கைப்பேசி செயலி ஒன்றின் மூலம் கடன் வாங்கியுள்ளாா். ஆனால், போதிய அளவு வருமானம் இல்லாத காரணத்தால் அவரால் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை.
இதனிடையே, கடன் வழங்கிய நிறுவனத்தின் தரப்பிலிருந்து கடனைத் திருப்பிச் செலுத்துமாறு பிரவீன் குமாருக்குத் தொடா்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளனா். தன்னிடம் போதிய வருமானம் இல்லை என பிரவீன் குமாா் தெரிவித்து வந்தபோதிலும், நிறுவனத்தினா் மீண்டும் மீண்டும் அவருக்கு அழுத்தம் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
விரக்தி அடைந்த பிரவீன் குமாா், தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
தகவலறிந்த வேலூா் தெற்கு போலீஸாா், உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரவீன் குமாரின் சடலத்தை மீட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





