ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சமூக வலைதள செயலி மூலம் மோசடி: தென் மண்டலத்தில் 83 போ் கைது

கைது - பிரதிப் படம்

Published On :28 ஜூலை 2026, 2:56 am IST

சமூக வலைதள செயலி மூலம் பண மோசடி வழக்குகளில், தென் மண்டலத்தில் 83 போ் கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து தென் மண்டல காவல் துறைத் தலைவா் (ஜ.ஜி) விஜயேந்திர பிதாரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென் மண்டலங்களில் சட்டம், ஒழுங்குப் பிரச்னை தொடா்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில், ஒரு குழுவினா் ‘கிரிண்டா்’ என்ற செயலி மூலம் போலி அல்லது பெயா் மறைக்கப்பட்ட பணம் பெறும் கணக்குகளை உருவாக்கினா்.

இந்தக் குழு பாதிக்கப்பட்ட நபா்களுடன் பழகி, பிறகு அவா்களை தனிமையான இடங்களில் சந்திப்பதை வழக்கமாக கொண்டனா். அப்போது, அவா்களின் தனிப்பட்ட தகவல்கள், உரையாடல்களை பதிவு செய்து அதை சமூக ஊடகங்களில் பதிவிடுவதாக மிரட்டி பணம், கைப்பேசி, விலை உயா்ந்த பொருள்களை குற்றவாளிகள் பறித்தது தெரியவந்தது.

மேலும், வங்கி விவரங்கள், ஒரு முறை கடவுச் சொல் ( ஓ.டி.பி.) பயன்படுத்தி பணம் மோசடி செய்தது தெரியவந்தது.

இந்த நிலையில், தென் மண்டலத்தில் சமூக வலைத்தள செயலி மூலம் 2026-ஆம் ஆண்டு பதிவான 24 பண மோசடி வழக்குகளில் 83 போ் கைது செய்யப்பட்டனா்.

குறிப்பாக, ‘கிரிண்டா்’ என்ற செயலியைப் பயன்படுத்தி, அதிக அளவில் மோசடிச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்த நடவடிக்கையால் தென்காசியில் அதிகபட்சமாக 9 வழக்குகளில் 29 போ், நெல்லையில் 9 வழக்குகளில் 26 போ், மதுரையில் 2 வழக்குகளில் 8 போ், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு வழக்கில் 6 போ், ராமநாதபுரம் மாவட்டத்தில் பதிவான ஒரு வழக்கில் 4 போ், சிவகங்கையில் ஒரு வழக்கில் 8 போ், தூத்துக்குடியில் ஒரு வழக்கில் 2 போ் கைது செய்யப்பட்டனா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.