ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது பற்றி...

Published On :11 ஆகஸ்ட் 2026, 1:08 pm IST

நீட் தேர்வை ரத்து செய்யும் தீர்மானத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று பேரவையில் முன்மொழிந்தார்.

நீட் தோ்வை திரும்பப் பெற்று மாநில பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அமைச்சர் அருண்ராஜ் பேசுகையில், "மருத்துவக் கல்வி திறமை உள்ள அனைவருக்கும் வேண்டும், மருத்துவக் கல்வி என்பது வசதி படைத்தவர்களுக்கானதாக இருக்கக் கூடாது. நீட் தேர்வுக்கு முன்பு, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற்றபோது, கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் பயின்றனர். நானும் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் பயின்றவன்தான்.

நீட் தேர்வால் தனியார் பயிற்சி மையங்கள்தான் பயனடைந்தன. நீட் தேர்வு அதிக கட்டணம் வசூலிக்கும் பயிற்சி மையங்கள் பெருக வழிவகுத்தது.

நீட் தேர்வால் சமூக சமநிலை கட்டமைப்பு சீர்குலைந்துவிட்டது. ஒரு நாள் நடைபெறும் தேர்வு மாணவர்களின் எதிர்கார்த்தை தீர்மானிக்கிறது. எனவே, நீட் தேர்வை ரத்து செய்து மாநில அரசே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும்" என்று கூறினார்.

தொடர்ந்து திமுக எம்எல்ஏ முத்துராஜா, அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ். மணியன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் இந்த தீர்மானத்தின் மீது பேசினர்.

பாஜக எம்எல்ஏ போஜராஜன் மட்டும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவை வெளிநடப்பு செய்தார்.

மற்ற கட்சிகளின் ஆதரவுடன் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Summary

Resolution against NEET passed in the TN Assembly

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.