ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்! இந்திய கம்யூ. வரவேற்பு

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் வழங்கி தமிழக அரசு கொண்டு வந்துள்ள தனித்தீர்மானத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது பற்றி...

M. Veerpandian, State Secretary of the Communist Party of India — TVK Leader Vijay.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் - முதல்வர் விஜய் - படம் - தினமணி

Published On :10 ஆகஸ்ட் 2026, 3:39 pm IST

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் வழங்கி தமிழக அரசு கொண்டு வந்துள்ள தனித்தீர்மானத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் திங்கள்கிழமை (ஆக.10) தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதுகுறித்து மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற சட்டமன்றத் தீர்மானம் வரவேற்பிற்குரியது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசு நிகழ்ச்சிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து எப்போதும் முதலில் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வர் சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை கொண்டு வந்தார்.

ஒருமனதாக இத்தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது வரவேற்பிற்குரியது. தமிழ்நாட்டின் ஆளுநர் மத்திய அரசின் சுற்றறிக்கையின் அடிப்படையில் அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரத்தை பாடும் நடைமுறையை கொண்டு வந்தார்.

அண்மையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் வழிகாட்டலை பின்பற்றாமல், ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர் ஆலோசனை அடிப்படையில் வந்தேமாதரம் முதலில் பாடப்பட்டது. தமிழுக்கு முதன்மை இடம் கிடைக்கவில்லை.

"வந்தேமாதரம்" பாடலில் சில வரிகள் ஒரு குறிப்பிட்ட பெரும்பான்மை மதச்சார்பு கொண்டதாகவும், சில வரிகள் சிறுபான்மை முஸ்லீம் சமூகத்திற்கு எதிரானதாகவும் இருப்பதால், குறிப்பிட்ட அந்தப் பாடல் வரிகளை தேசிய கீதமாக ஏற்கக் கூடாது என விடுதலை இயக்கக் காலத்திலேயே தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆளுநர் மாளிகை நிர்வாகத்தின் உத்தரவுப்படி, பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நிரலில் "வந்தேமாதரம் பாடலுக்கு முதலிடம் வழங்கி, தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் நிலையில் வைத்தது, வழக்கத்தில் இருந்து வரும் மரபை மீறிய செயலாகும். இவ்வாறு ஆளுநரின் தமிழ், தமிழர் விரோத நடவடிக்கைகள் தொடரும் நிலையில், தமிழ்நாட்டின் மரபுரிமையை, பண்பாட்டை பாதுகாக்க அரசு பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. அரசு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதன்மைப்படுத்த, வழக்கத்தில் இருந்து வரும் மரபுரிமையை நிலை நாட்ட எடுத்துவரும் நடவடிக்கைகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மூன்றாம் இடத்துக்கு தள்ளிவிடும் மத்திய அரசின் சுற்றறிக்கையை திரும்பப் பெறவும் தமிழ்நாடு அரசு வலுவான அழுத்தம் தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

M. Veerapandian, the Tamil Nadu State Secretary of the Communist Party of India, has stated that his party welcomes the special resolution introduced by the Tamil Nadu government to accord primacy to the 'Tamil Thai Vazhthu'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.