ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கருணாநிதி வளர்த்த மூத்த பிள்ளை முரசொலி! மு.க. ஸ்டாலின் பதிவு!

முரசொலி பத்திரிகையின் ஆண்டு விழாவையொட்டி மு.க. ஸ்டாலின் பதிவு...

MK Stalin

மு.க. ஸ்டாலின் - X | MKStalin

Published On :10 ஆகஸ்ட் 2026, 12:47 pm IST

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி பத்திரிகையின் அலுவலகத்துக்கு நேரில் சென்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.

முரசொலி பத்திரிகையின் ஆண்டு விழாவையொட்டி, அந்தப் பத்திரிகையின் அலுவலகத்துக்கு நேரில் சென்று பார்வையிட்ட மு.க. ஸ்டாலின், புகைப்படங்களைப் பகிர்ந்து சமூக வலைதளங்களில் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் தெரிவித்திருப்பதாவது:

”திமுக தொண்டர்களின் இதயத்துடிப்பு - தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றின் நாட்குறிப்பு - கருணாநிதி உதிரம் சிந்தி வளர்த்த மூத்த பிள்ளை முரசொலி!

அதன் அலுவலகத்திற்குச் சென்று, என் மூத்த சகோதரனுக்கு 85-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்!

கருணாநிதி, முரசொலி மாறன், முரசொலி செல்வம் என முரசொலியைத் தொடர்ந்து செழுமையாக வளர்த்தார்கள். நானும் முரசொலிக்காகப் பார்க்காத வேலையே இல்லை என்னும் அளவுக்கு, அனைத்து நிலைகளிலும் பணியாற்றி இருக்கிறேன்.

அறிவிப்புப் பலகைகளாக மட்டுமே இயங்கும் பல அரசியல் கட்சி இதழ்களுக்கு இடையே, கருத்தாழமிக்க கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், பொங்கல் மலர், பாசறைப் பக்கம் என அறிவாலயத்தின் அறிவாயுதமாகத் திகழும் முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க! அதன் பணிகளில் வெல்க!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Murasoli is the eldest child nurtured by Karunanidhi! M.K. Stalin's post!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.