ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் விசில் அடித்த கவுன்சிலர் இடைநீக்கம்!

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் விசில் அடித்த கவுன்சிலர் மீது மேயர் நடவடிக்கை.....

Councillor suspended for blowing whistle during Tirunelveli Corporation meeting!

நெல்லை மாநகராட்சி கூட்டம்.

Published On :10 ஆகஸ்ட் 2026, 2:29 pm IST

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் விசில் அடித்த கவுன்சிலரை இடைநீக்கம் செய்து மேயர் உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது கூட்டத்திற்கு 19-வது வார்டு கவுன்சிலரான அல்லா பிச்சை வந்தார். அவர் தி.மு.க.வில் நின்று வெற்றி பெற்ற நிலையில் சமீபத்தில் த.வெ.கவுக்கு மாறினார். இந்த நிலையில் இன்று அவர் த.வெ.க. கட்சி துண்டை அணிந்தபடி கூட்டத்திற்கு வந்தார்.

பின்னர் கவுன்சிலர் அல்லா பிச்சை, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சி கவுன்சிலர்களுக்கு சால்வை அணிவித்துவிட்டு அமர்ந்தார். இந்த நிலையில் அவர் திடீரென கையில் வைத்திருந்த விசிலை எடுத்து ஊதினார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து அவரோடு வாக்குவாதம் செய்தனர். அதனைத் தொடர்ந்து இனி விசில் அடிக்கக் கூடாது என்று மேயர் எச்சரித்தார். ஆனாலும் அவர் அதன் பின்னரும் 2 முறை விசில் அடிக்கவே மாமன்றம் போராட்ட களம் போல் மாறியது. தி.மு.க கவுன்சிலர்கள் அவரை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. நிலைமை மோசமாகவே மேயர் ராமகிருஷ்ணன் உடனடியாக நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு அவை மாண்பை குறைக்கும் விதமாக மாமன்ற கூட்டத்திற்கு வந்து விசில் அடித்த கவுன்சிலர் அல்லா பிச்சையை மேற்கொண்டு 2 கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது என்று இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Summary

The Mayor has ordered the suspension of a councilor who blew a whistle during the Nellai Corporation meeting.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்