ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மகாராஷ்டிரம்: உண்டு-உறைவிட பள்ளியில் பாம்பு கடித்து 3 சிறுமிகள் பலி!

மகாராஷ்டிரத்தில் உண்டு-உறைவிட பள்ளியில் 6 சிறுமிகளை பாம்பு கடித்தது பற்றி...

Snake bites 6 tribal girls at school in Maharashtra's Gadchiroli; 3 dead, probe ordered

பாம்பு. - கோப்புப்படம்.

Published On :10 ஆகஸ்ட் 2026, 12:53 pm IST

மகாராஷ்டிரத்தில் உண்டு-உறைவிட பள்ளியில் பாம்பு கடித்து பழங்குடியினச் சிறுமிகள் 3 பேர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள ஜப்தலாய் கிராமத்தில் அரசு உதவி பெறும் பழங்குடியினருக்கான உண்டு-உறைவிட பள்ளி இயங்கி வருகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பள்ளி விடுதியின் தரையில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமிகளை விஷப்பாம்பு கடித்தது.

இதில் 8, 12 மற்றும் 14 வயதுடைய மூன்று சிறுமிகள் பலியாகினர். 11 முதல் 14 வயதுக்குட்பட்ட மற்ற மூன்று சிறுமிகள் பாம்பு கடிக்குச் சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

இதனிடையே இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அவிஷ்யந்த் பாண்டா தெரிவித்தார்.

இச்சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த அவர், பள்ளியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

Summary

Three tribal girls died and as many others were undergoing treatment after a venomous snake bit them at a residential school in Maharashtra's Gadchiroli, prompting the district administration to launch an inquiry into the incident, officials said on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.