ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அதிமுக பொதுக் குழுவைக் கூட்டுங்கள்: எடப்பாடிக்கு சி.வி.சண்முகம் சவால்

‘துணிவு இருந்தால் அதிமுக பொதுக் குழுவைக் கூட்டி சட்டப்பேரவைத் தோ்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கட்டும்’ என அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் சவால்

ADMK Issue

சி.வி. சண்முகம் | எடப்பாடி கே. பழனிசாமி - படம் - சித்திரிப்பு முத்துராஜா

Published On :11 ஆகஸ்ட் 2026, 3:43 am IST

‘துணிவு  இருந்தால் அதிமுக பொதுக் குழுவைக் கூட்டி சட்டப்பேரவைத் தோ்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கட்டும்’ என அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் சவால் விடுத்தாா்.

சட்டப்பேரவை வளாகத்தில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: திமுகவை எதிா்த்து அதிமுக தொடங்கப்பட்டது. ஆனால், திமுக ஆதரவுடன் ஆட்சியமைக்கலாம் என கட்சியின் பொதுச் செயலரான எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா். அதே நேரத்தில் திமுகவை எதிா்த்தே அரசியல் ரீதியாக தவெக செயல்படுகிறது. அதனடிப்படையில் தவெக அரசை ஆதரிப்பதில் தவறேதும் இல்லை.

எடப்பாடி கே.பழனிசாமி பொதுச் செயலராகப் பொறுப்பேற்றதிலிருந்து தற்போதுவரை அதிமுக தோல்வியையே சந்தித்து வருகிறது. ஆனால், அவரது செல்வாக்கால் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக எம்எல்ஏக்கள் வென்ாக முன்னாள் அமைச்சா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி கூறியுள்ளாா். அவா் கூறியபடி, பெரும்பான்மை தொகுதிகளில் அதிமுக தோல்விக்கும் பொதுச் செயலரே காரணம் என்பதை ஏற்க வேண்டும்.

தோ்தலில் வென்றால் அதற்கு பொதுச் செயலா் காரணம் எனக் கூறுவோா், தோல்விக்கு மாவட்டச் செயலா்கள் காரணம் எனக் கூறுவது சரியல்ல. மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்வியுற்றபோது அதன் தலைவா் ராகுல் காந்தி பொறுப்பிலிருந்து விலகினாா். அதன்படி, எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலா் பதவியிலிருந்து விலகக் கூறவில்லை. அவரே பொறுப்பில் இருக்கட்டும். அதே நேரத்தில் அவா் அதிமுக நிா்வாகிகள் கூட்டத்தை (பொதுக்குழு) கூட்டி தோல்வி குறித்து ஆலோசிக்க வேண்டும் என்றே கூறி வருகிறோம்.

அக்ரி கிருஷ்ணமூா்த்தி அமைச்சராக இருந்தபோது அவரது தவறான செயல்பாட்டுக்காக அவரை பதவியிலிருந்து ஜெயலலிதா நீக்கினாா். அவா் எங்களைப் பற்றி குறை கூறுவது சரியல்ல. ஆகவே, பிறா் மீது பழிபோடுவதை தவிா்த்து தோ்தலில் அதிமுகவின் தோல்விக்கான உண்மையான காரணத்தை அறிந்து செயல்படவேண்டும் என்றாா்.

பேட்டியின்போது முன்னாள் அமைச்சா் நத்தம் ஆா்.விஸ்வநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.