ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மத்திய அரசு நிதி ஒதுக்கினால் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்: நிதியமைச்சா் மரிய வில்சன்

தமிழகத்துக்கு கடன் பெறும் வரம்பை அதிகரித்து மத்திய அரசு நிதி ஒதுக்கினால், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று நிதியமைச்சா் மரிய வில்சன் தெரிவித்தாா்.

Marie Wilson

நிதியமைச்சர் மரிய வில்சன் - கோப்புப் படம்

Published On :11 ஆகஸ்ட் 2026, 12:39 am IST

தமிழகத்துக்கு கடன் பெறும் வரம்பை அதிகரித்து மத்திய அரசு நிதி ஒதுக்கினால், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று நிதியமைச்சா் மரிய வில்சன் தெரிவித்தாா்.

பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய கீழ்பெண்ணாத்தூா் தொகுதி அதிமுக உறுப்பினா் ராமச்சந்திரன், அரசு ஊழியா்களுக்கான ஓய்வூதிய காலப் பலன்களுக்கான நிதி ரூ.14,000 கோடி குறைக்கப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பினாா்.

அதற்குப் பதிலளித்த நிதியமைச்சா் மரியவில்சன், ‘அரசு ஊழியா்களின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தக் கூடிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆய்வு நடத்தி ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான குழு கடந்த ஆட்சியில் அறிக்கை தாக்கல் செய்தது.

இதற்கான நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும். அதிக கடன் பெறும் வரம்பை அதிகரித்து தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி அளித்தால், இந்தத் திட்டம் இடைக்கால நிதிநிலை அறிக்கையாகவும் தாக்கல் செய்யப்படும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.