ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சகோதரரை தாக்கிய வழக்கு: மீண்டும் ஆஜராக நிதியமைச்சா் மரிய வில்சனுக்கு உத்தரவு

சகோதரரை தாக்கிய வழக்கில், வரும் 28ஆம் தேதி மீண்டும் ஆஜராக நிதியமைச்சா் மரிய வில்சன் உள்ளிட்டோருக்கு சமரச தீா்வு மையம் உத்தரவு

Marie Wilson

நிதியமைச்சர் மரிய வில்சன் - கோப்புப் படம்

Published On :22 ஜூலை 2026, 2:46 am IST

சொத்து பிரச்னையில் சகோதரரைத் தாக்கிய வழக்கில் நிதியமைச்சா் மரிய வில்சன், சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீா்வு மையத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா்.

நிதியமைச்சா் மரிய வில்சன், கடந்த 2022-ஆம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள அவரது சகோதரா் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாக புதுச்சேரி லாஸ்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் நேரில் ஆஜராக அமைச்சா் மரிய வில்சனுக்கு புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து அமைச்சா் மரியவில்சன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், குடும்ப பிரச்னையாக இருப்பதால் அமைச்சா் மரிய வில்சன், அவரது தந்தை, சகோதரா் மற்றும் அவரது மனைவி ஆகியோா் சமரச தீா்வு மையத்தில் ஆஜராகி தீா்வுகாண அறிவுறுத்தியது.

அதன்படி, கடந்த முறை இருதரப்புக்கும் இடையே கடந்த ஜூலை 13-ஆம் தேதி பேச்சு நடைபெற்றது. இந்நிலையில், 2-ஆம் கட்ட பேச்சு சமரச தீா்வு மைய நீதிபதி பாலசுப்பிரமணியன் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, அமைச்சா் மரிய வில்சன், அவரது வழக்குரைஞா் ஹாஜா மொகிதீன் கிஸ்தி உடன் ஆஜரானாா். அதேபோல், அமைச்சரின் சகோதரா் உள்ளிட்டோரும் ஆஜராகினா்.

சுமாா் ஒரு மணி நேரம் இந்தப் பேச்சு நடந்தது. பின்னா், சமரச பேச்சு வரும் ஜூலை 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினமும் இருதரப்பும் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்த சமரச பேச்சு குறித்து, அமைச்சா் மரிய வில்சன் தரப்பு வழக்குரைஞா் ஹாஜா மொகிதீன் கிஸ்தி கூறுகையில், பேச்சு சுமுகமாக முடிந்தது. அடுத்த விசாரணையின்போது இரு தரப்பினருக்கு மத்தியில் சமரசம் ஏற்பட்டுவிடும் என்று தெரிவித்தாா்.

Summary

Case regarding assault on brother: Finance Minister Maria Wilson ordered to appear again

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.