ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சென்னையில் மழை: வானில் வட்டமடித்தப்படி தாமதமாக தரையிறங்கிய 6 விமானங்கள்

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள் தாமதமாகத் தரையிறக்கப்பட்டது குறித்து...

வானில் வட்டமடித்தப்படி தாமதமாக தரையிறங்கிய 6 விமானங்கள் - கோப்புப்படம்

Published On :9 ஆகஸ்ட் 2026, 11:29 pm IST

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காற்றுடன் பெய்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள் தாமதமாகத் தரையிறக்கப்பட்டன.

சென்னை விமான நிலையம் அமைந்துள்ள மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால், பிற நகரங்களில் வந்த விமானங்கள் தரையிறங்குவதிலும், விமான நிலையத்தில் பிற நகரங்களுக்கு புறப்பட வேண்டிய விமானங்களுக்கும் தாமதம் ஏற்பட்டது.

மோசமான வானிலை காரணமாக, அந்தமான், தில்லி, கோவா, ஹைதராபாத், திருச்சி, கொச்சி ஆகிய நகரங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த 6 விமானங்கள் உடனடியாக தரையிறங்க முடியாமல் வானில் வானில் வட்டமடித்த நிலையில், தாமதமாகத் தரையிறக்கப்பட்டன.

இதனால் சென்னைக்கு வரவேண்டிய பயணிகளும், சென்னையிலிருந்து பிற பகுதிகளுக்கு செல்ல காத்திருந்த பயணிகளும் கடும் சிரமத்தைச் சந்தித்தனா்.

Summary

Rain in Chennai: Six flights circled overhead before landing late

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.