ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இரவு 7 வரை சென்னை புறநகர் உள்பட 14 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கான மழை நிலவரம் பற்றி...

சென்னை புறநகர்ப் பகுதிகளில் மழை

மழை - Dinamani.com

Published On :17 ஆகஸ்ட் 2026, 4:24 pm IST

தமிழ்நாட்டில் உள்ள 14 மாவட்டங்களில் இன்றிரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கான மழை நிலவரம் பற்றிய அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் மாலை 4 மணியளவில் வெளியிட்டது.

அதில், சென்னை புறநகர்ப் பகுதிகள் அடங்கிய திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, கரூர், திண்டுக்கல் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

Summary

Rain in 14 districts, including Chennai suburbs, until 7 PM!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.