ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து முதல்வர் கடிதம் எழுதியிருக்க வேண்டும்: திமுக

கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து முதல்வர் கடிதம் எழுதியிருக்க வேண்டும் என திமுக செய்தித் தொடர்பாளர் பேசியது பற்றி...

DMK President M.K. Stalin

முதல்வர் விஜய் - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - (கோப்புப் படம்)

Published On :8 ஆகஸ்ட் 2026, 9:44 pm IST

தொகுதி மறுவரையறை குறித்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்து, கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் கடிதம் எழுதியிருக்க வேண்டும் என திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் சனிக்கிழமை (ஆக. 8) பேசியுள்ளார்.

தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற, மத்திய பாஜக அரசு ஆலோசித்து வருகிறது.

இதனால், தென் மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து முடிவெடுக்கத் தமிழக எம்.பி.க்களுடன் முதல்வர் விஜய் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், தவெக அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், ராஜ்மோகன் உள்ளிட்டோரும், காங்கிரஸ், விசிக, கம்யூ., ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 20 எம்.பி.க்களும் பங்கேற்றனர்.

இதுகுறித்து டி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:

அவர் (முதல்வர் விஜய்) கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து ஒரு கடிதம் எழுதியிருக்க வேண்டும். இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தும்படி, அவர் கட்சித் தலைமையைக் கேட்டிருக்க வேண்டும்.

மேலும், ஒரு நிகழ்ச்சி நிரல் இருந்திருக்க வேண்டும். கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த கட்சியின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து அவர்கள் எதுவும் கூறவில்லை. கட்சித் தலைவர்களின் அனுமதியின்றி அவர்கள் எப்படி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை என டி.கே.எஸ். இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார்.

Summary

DMK spokesperson T.K.S. Elangovan stated on Saturday (Aug. 8) that the Chief Minister should have written to party leaders inviting them to participate in the meeting regarding constituency delimitation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.