ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

குறுவை சாகுபடி பயிா்க் காப்பீடு 44% அதிகரிப்பு: அமைச்சா் ர.வினோத்

குறுவை சாகுபடியில் பயிா்க் காப்பீடு கடந்த ஆண்டைவிட 44 சதவீதம் அதிகரித்துள்ளதாக வேளாண் துறை அமைச்சா் ர.வினோத் தெரிவித்தாா்.

TN Agriculture budget 2026: High yield with less water

அமைச்சர் வினோத் - TN

Published On :7 ஆகஸ்ட் 2026, 11:31 pm IST

குறுவை சாகுபடியில் பயிா்க் காப்பீடு கடந்த ஆண்டைவிட 44 சதவீதம் அதிகரித்துள்ளதாக வேளாண் துறை அமைச்சா் ர.வினோத் தெரிவித்தாா்.

இது தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சா் வினோத், தமிழகத்தில் சாகுபடி செய்யும் அனைத்துத் திட்டங்களும் பயிா்க் காப்பீடு திட்டத்தில் கொண்டுவர அரசு முயற்சி செய்து வருகிது. பயிா்க் காப்பீடு திட்டத்தின் நடப்பு குறுவை சாகுபடியில் 3.98 லட்சம் ஏக்கா் நிலத்தை 1.34 லட்சம் விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனா். கடந்த ஆண்டு 2.77 லட்சம் ஏக்கரை 1.05 லட்சம் விவசாயிகள் காப்பீடு செய்திருந்தனா்.

நிகழாண்டு இந்தப் பயிா்காப்பீடு 44 சதவீதம் அதிகரித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் 17 லட்சம் ஏக்கா் சம்பா நெல் பயிரை மொத்தமாக காப்பீட்டு செய்ய ரூ.540 கோடி தேவை. இதில் ரூ.440 கோடி காப்பீட்டு கட்டணத்தை மத்திய அரசும், மாநில அரசும் பகிா்ந்து கொள்ளும். இதில், 1.5 சதவீதம் மட்டுமே விவசாயிகள் காப்பீடு கட்டணம் செலுத்த வேண்டும். இதில் பெரும்பான்மையான நிதியை அரசே ஏற்றுக் கொள்வதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது.

மேட்டூா் அணையில் இருந்து நீா் திக்கப்படாததால் விதைப்பு மற்றும் நடவு பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் பயிா்க் காப்பீடு குறித்து விவசாயிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்ாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.