ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பொருளாதார ஆலோசனைக் குழுவில் பிரவீண் சக்ரவர்த்தி உள்ளாரா? திமுக எம்எல்ஏ கேள்வி!

தமிழக அரசின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் பிரவீண் சக்ரவர்த்தி உள்ளாரா என திமுக எம்எல்ஏ ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளது பற்றி...

Is Praveen Chakravarty on the Economic Advisory Council, DMK MLA asks

திமுக எம்எல்ஏ ரகுபதி

Published On :7 ஆகஸ்ட் 2026, 11:59 am IST

காங்கிரஸ் எம்.பி. பிரவீண் சக்ரவர்த்தி, தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இருக்கிறாரா என திமுக எம்.எல்.ஏ. ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

பேரவையில் பேசிய திமுக எம்எல்ஏ ரகுபதி,

"காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரவீண் சக்ரவர்த்தி, தமிழ்நாடு அரசின் கொள்கை வடிவமைப்புக் குழுவிலும் மாண்டேக் சிங் அலுவாலியா குழுவுக்கு ஆலோசனைகள் வழங்குவதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறதே? அது உண்மைதானா? அவருக்கு என்று ஒரு அதிகாரத்தை இந்த அரசு தந்திருக்கிறதா?" என்று திமுக எம்எல்ஏ ரகுபதி கேள்வி எழுப்பினார்.

அவர் இந்த அவையின் உறுப்பினர் இல்லை என்பதால் அவரைப்பற்றி பேசுவது மரபு இல்லை எனவும் தமிழக அரசின் எந்த குழுவிலும் அவர் அங்கமாக இல்லை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பதில் அளித்தார்.

இந்த பதிலுக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன், ”பிரவீண் சக்ரவர்த்தி தமிழ்நாடு அரசில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. அரசாணையில் மாண்டேக் சிங் அலுவாலியா குழுவில் யார் இருக்கிறார்கள் என குறிப்பிட்டிருக்கிறதோ அவர்கள் மட்டும் தான் அந்த குழுவில் இருக்கிறார்கள் ” எனத் தெரிவித்தார்.

ஆனால் பிரவீண் சக்ரவர்த்தி தனது எக்ஸ் பக்கத்தில், "நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து, மற்ற விஷயங்களுடன் விவாதிக்கப்பட்டது. கருத்துகளைப் பொறுமையுடன் கேட்டறிந்தார்" என்று அவரைச் சந்தித்த புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

Summary

Is Praveen Chakravarty on the Economic Advisory Council, DMK MLA asks

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.