கர்நாடக அணைகளில் போதிய நீர் இருந்தும் தண்ணீர் திறக்கப்படவில்லை! இபிஎஸ்
சட்டப்பேரவையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியது பற்றி...
எடப்பாடி பழனிசாமி - TN
கர்நாடக அணைகளில் போதிய நீர் இருந்தும் தண்ணீர் திறக்கப்படவில்லை என்று பேரவையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தவெக அரசின் முதல் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவையில் இன்று முதல் பட்ஜெட் உரை மீதான விவாதங்கள் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது எம்எல்ஏக்கள் பேசி வருகின்றனர்.
அப்போது முதல்வர் பேச எழுந்த நிலையில், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ள தங்களை பேச அனுமதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அதன்பின்னர் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் பேசிய பிறகு பேரவையில் பேசிய எடப்பாடி பழனிசாமி,
காவிரி பிரச்னை, டெல்டா விவசாயிகள் குறித்து என இரண்டு தீர்மானங்கள் கொண்டு வந்திருக்கிறோம்.
"காவிரி விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் என்பது தேவையில்லை. மேக்கேதாட்டு குறித்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
இதுவரை போராடி வாதாடிதான் காவிரி தண்ணீர் பெற்றுக்கொண்டிருக்கிறோம். கர்நாடக அணைகளில் போதிய நீர் இருந்தும் தண்ணீர் திறக்கப்படவில்லை. காவிரி ஒழுங்கற்றுக்குழு உத்தரவிட்டும் நீர் திறக்கப்படவில்லை.
இப்போது கர்நாடக அணைகள் நிரம்பியதால் உபரிநீர் மட்டும் தான் வருகிறது.
காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும். கூட்டணி கட்சிகளும் இதையே வலியுறுத்துகின்றன.
டெல்டா மாவட்ட விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் இந்த சமயத்தில் குறுவை சாகுபடி செய்வார்கள். இந்த ஆண்டும் செய்தபோது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு பயிர்கள் சேதமாகியுள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" என்று கூறினார்.
Summary
EPS speech in TN assembly on budget session
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






