
சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க ரூ. 63.81 கோடி நிதி ஒதுக்கீடு!
சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்...
அமைச்சர் வினோத் - TN assembly
சிறுதானியங்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ. 63.81 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என பேரவையில் அமைச்சர் வினோத் தெரிவித்தார்.
2026 -27 ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
அவர் பேசியதாவது:
"சிறுதானியங்கள் பயன்பாடு தற்போது அனைத்து பகுதிகளிலும் அதிகரித்துள்ளது. கம்பு, சோளம், கேழ்வரகு ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்க 'தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு, உற்பத்தி மற்றும் சிறுதானியங்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ. 63.81 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 4.75 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனிவரகு போன்ற பயிர்களின் சாகுபடியை இருமடங்காக அதிகரிக்க தமிழ்நாடு குறுதானிய இயக்கம். இதற்காக ரூ. 7.61 கோடி ஒதுக்கீடு.
அதிக ஊட்டச்சத்து நிறைந்த சீமைத் தினை, பாப்பரை, குலசாமை ஆகிய பயிர்களின் செயல்விளக்கத் திடல்கள் அமைக்கப்படும்.
மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ. 36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
Summary
TN Agriculture budget 2026: Allocation of Rs. 63.81 crore to boost millet production
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






