ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஸ்ட்ராபெர்ரி, அவகேடோ, கிவி... உயர் மதிப்பு பழங்கள் உற்பத்திக்கு ரூ. 1.87 கோடி நிதி!

ஸ்ட்ராபெர்ரி, அவகேடோ, கிவி உள்ளிட்ட உயர் மதிப்பு பழங்கள் உற்பத்திக்கு ரூ. 1.87 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

Published On :6 ஆகஸ்ட் 2026, 12:25 pm IST

ஸ்ட்ராபெர்ரி, அவகேடோ, கிவி உள்ளிட்ட உயர் மதிப்பு பழங்கள் உற்பத்திக்கு ரூ. 1.87 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் ஆர். வினோத் தெரிவித்தார்.

2026 -27 ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். தமிழ்நாடு தளிர் கீரைகள் திட்டத்துக்கு ரூ. 1.20 கோடி, பயிர்கள் உற்பத்தி அதிகரிப்புக்கு ரூ. 41 கோடி, தென்னை விவசாயிகள் சிறப்புத் திட்டத்துக்கு ரூ. 16 கோடி, தென்னை நோய் தடுப்பு திட்டத்துக்கு ரூ. 1 கோடி, தென்னை டானிக் திட்டத்துக்கு ரூ. 6.20 கோடி, அரசு தோட்டக்கலைப் பண்ணைகளை மேம்படுத்த ரூ. 2.3 கோடி, பயறு வகைகள் மற்றும் எண்ணெய்வித்துப் பயிர்களில் தன்னிறைவுக்கான இயக்கத்துக்காக ரூ. 203.64 கோடி என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று, தென்னை பதப்படுத்தும் கழகத்துக்கு ரூ. 22 கோடி, தென்னை சிறப்புத் திட்டத்துக்கு ரூ. 41 கோடி, காளான் உற்பத்திக்கூடங்களுக்கு ரூ. 50 லட்சம், வெங்காய சேமிப்புக் கிடங்குகள் அமைக்க ரூ. 22 கோடி, மருத்துவப் பயிர்கள் சாகுபடி ஊக்குவிப்பு திட்டத்துக்கு ரூ. 1.51 கோடி என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவை வேளாண் பல்கலை. மாணவர் களப்பயிற்சிக்காக ரூ.3 கோடியில் 6 பேருந்துகள், ரூ.15 கோடியில் நம்மாழ்வார் பெயரில் உயிர்ம வேளாண் பட்டயப் படிப்பு கல்லூரி என பல்வேறு செயல்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், ஸ்ட்ராபெர்ரி, அவகேடோ, கிவி உள்ளிட்ட உயர் மதிப்பு பழங்கள் உற்பத்திக்கு ரூ. 1.87 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் ஆர். வினோத் தெரிவித்தார்.

அவர் பேசுகையில், “உயர் மதிப்பு கொண்ட பழப் பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாக புளூபெர்ரி, ரம்புட்டான், லிச்சி, டிராகன் பழம், அவகேடோ, கிவி, மங்குஸ்தான், பேசன் பழம் போன்ற உயர் மதிப்பு கொண்ட பழங்களின் நுகர்வு பொதுமக்களிடையே அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகிறது.

இந்தப் பழங்களை நமது விவசாயிகள் தனிப் பயிராகவும், ஊடுபயிராகவும் 930 ஏக்கரில் சாகுபடி செய்திட ரூ. 1.87 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இவை தவிர தாய்லாந்து இனிப்புப் புளியையும், K.L.D. HRMN-99 போன்ற குளிர்ப் பிரதேசமல்லாத பகுதிகளிலும் விளையக்கூடிய ஆப்பிள் ரகங்களையும் தமிழ்நாட்டில் விவசாயிகளிடையே அறிமுகப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்றார் அவர்.

Summary

₹1.87 crore have been allocated for the production of high-value fruits, including strawberries, avocados, and kiwis.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.