ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வேளாண் பட்ஜெட்! வாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்!

வேளாண் பட்ஜெட்டில் வாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்

வாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம் - DIPR

Published On :6 ஆகஸ்ட் 2026, 1:54 pm IST

தமிழக வேளாண் பட்ஜெட்டில் வாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தின் 2026 - 27ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை, வேளாண் துறை அமைச்சர் வினோத் இன்று பேரவையில் தாக்கல் செய்தார்.

அதில், விவசாயிகள் எதிர்பார்க்காத பல திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. விவசாயிகளுக்கு பரிசு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வரவேற்பைப் பெற்றுள்ளன.

அதில் சில குறிப்பிட்ட வேளாண் திட்டங்கள் அதிக கவனம் பெற்றுள்ளன. அதில், ஒன்றாக

வாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம் அமைந்துள்ளது.

வாழை சாகுபடி செய்யும் மாவட்டங்களில், வாழைக் குலைகளின் எடை மற்றும் லேசான காற்றினால் வாழை மரங்கள் சாய்வதால் ஏற்படும் மகசூல் இழப்புகளைத் தவிர்க்க, வாழைக்கு முட்டுக்கொடுக்க நிதி உதவி வேண்டி விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில், 2026-27 ஆம் ஆண்டில், 6 கோடியே 25 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 6,175 ஏக்கரில் வாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.

மேலும், சாமந்தி செடிகளுக்கு எல்இடி விளக்குகள் திட்டம் இடம்பெற்றுள்ளது.

சாமந்தி மலர் சாகுபடியில் பருவநிலை மாறும் காலங்களில் சூரிய ஒளி பெறும் கால அளவு (பகற்பொழுது/Photoperiod) மாறுபடுவதால் சாமந்தி உற்பத்தியும் அதற்கேற்ப மாறுபடுகிறது. இதனால் செடிகளின் வளர்ச்சி குறைந்து, சிறிய பூக்கள் சீரற்ற முறையில் விரிந்து, தரமும் மகசூலும் குறைவதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது.

இச்சவாலை எதிர்கொள்ளும் வகையில் சாமந்தி சாகுபடி செய்யும் விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க, பருவநிலை மாறுபடும் காலங்களில் தேவையான கூடுதல் ஒளியை ஏற்படுத்தி செடிகளின் வளர்ச்சியைத் தூண்டுவதன் வாயிலாக, பூக்கும் தருணத்தை சந்தைத் தேவைக்கேற்ப மாற்றுவதற்கு எல்.இ.டி (LED) விளக்குகள் அமைக்கும் திட்டம் நடப்பாண்டில் ஐந்து கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.

பழ உறை, வாழை குலை உறை

பழ உறை மற்றும் வாழையில் குலை உறை பயன்படுத்துவதால் பூச்சி, நோய் தாக்குதல்கள், பறவைகள் அதிக வெப்பம், மழை ஆகியவற்றிலிருந்து பழங்கள் பாதுகாக்கப்பட்டு பழங்களின் தரமும் தோற்றமும் மேம்படுகின்றன.

கூடுதல் நன்மையாக, பூச்சிக்கொல்லி பயன்பாடு குறைவதுடன், சந்தை மதிப்பும் விவசாயிகளி வருமானமும் அதிகரிக்கின்றன. எனவே விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில், 2026-27 ஆம் ஆண்டில் 2500 ஏக்கரில் சாகுபடி செய்யப்படும் மா, கொய்யா போன் பழப் பயிர்களுக்கு பழ உறையும், வாழைக்கு குலை உறையும் 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் நிதியில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Agriculture Budget! Scheme to provide support props for banana plants!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.