ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

8 ராமேசுவரம் மீனவர்கள் கைது, படகுகளும் பறிமுதல்: நாடாளுமன்றத்தில் மாணிக்கம் தாகூர் கவன ஈர்ப்புத் தீர்மானம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 ராமேசுவரம் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி கவன ஈர்ப்புத் தீர்மானம் குறித்து...

Manickam Tagore moves calling-attention motion in Parliament

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் - எக்ஸ்

Published On :6 ஆகஸ்ட் 2026, 3:40 pm IST

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 ராமேசுவரம் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்துள்ளதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி கொழும்புவில் இருக்கும்போதே இந்த அத்துமீறல் நடந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்பது குறித்து வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி இலங்கை அரசிடம் பேசமாட்டாரா?

2023 முதல் இதுவரை 1,306 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 179 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மாநிலங்களவையிலேயே

பிரவீன் சக்ரவர்த்தியின் கேள்விக்கு பதிலளித்த ஒப்புக்கொண்டுவிட்டுப் பொறுப்பிலிருந்து நழுவும் மோடி அரசுக்கு, தமிழ்நாட்டு மக்களின் நலன் மீதும் மீனவர்களின் வாழ்வாதாரம் மீதும் துளியளவும் அக்கறையில்லை என்பது மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது!

இலங்கையின் இந்தத் தொடர் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், சிறைபிடிக்கப்பட்ட அனைவரையும் அவர்களின் படகுகளுடன் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் நாடாளுமன்றத்தில் இன்று (ஆக 6) கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்துள்ளேன்! என அவர் கூறியுள்ளார்.

Summary

8 Rameswaram fishermen arrested, boats seized: Manickam Tagore moves calling-attention motion in Parliament

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.