ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சென்னை திரும்பியதும் நள்ளிரவில் மு.க. ஸ்டாலினுடன் உதயநிதி சந்திப்பு!

சென்னையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை உதயநிதி சந்தித்தது பற்றி...

udhayanidhi stalin

சென்னை திரும்பியதும் நள்ளிரவில் மு.க. ஸ்டாலினுடன் உதயநிதி சந்திப்பு - x | udhayanidhi

Published On :5 ஆகஸ்ட் 2026, 8:39 am IST

தஞ்சாவூரில் இருந்து சென்னை திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நள்ளிரவில் சந்தித்துப் பேசினார்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சென்னை நீலாங்கரை இல்லத்தில் கைது செய்யப்பட்ட அவர், சாலை வழியாக காவல்துறை வாகனத்தில் தஞ்சாவூருக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

நேற்றிரவு தஞ்சாவூர் சென்றடைந்த உதயநிதி ஸ்டாலினிடம் ஒன்றரை மணிநேரத்துக்கு மேல் விசாரணை நடத்திய காவல்துறையினர் அவரை விடுவித்தனர்.

உதயநிதி ஸ்டாலின் கைது காரணமாக மாநிலம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், நேற்று பதற்றமான சூழல் நிலவியது.

இதனிடையே, தஞ்சாவூரில் இருந்து திருச்சி சென்ற உதயநிதி, அங்கிருந்து விமானம் மூலம் நேற்று நள்ளிரவு சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் உதயநிதிக்கு மாலை அணிவித்து திமுக நிர்வாகிகளும் முன்னாள் அமைச்சர்களும் வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க. ஸ்டாலின் இல்லத்துக்கு நேரில் சென்ற உதயநிதி ஸ்டாலின், அவரை சந்தித்துப் பேசினார்.

Summary

Udhayanidhi meets M.K. Stalin at midnight upon returning to Chennai!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.