ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை குறித்து உதயநிதி ஸ்டாலின் விமர்சித்திருப்பது பற்றி...

Udhayanidhi Stalin

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் - X

Published On :6 ஆகஸ்ட் 2026, 4:22 am IST

தவெக அரசு தாக்கல் செய்த தமிழக பட்ஜெட்டில் கடந்த ஆட்சியில் திமுக செயல்படுத்திய திட்டங்களே ‘வெற்றி’ என பெயா் மாற்றப்பட்டு இடம்பெற்றுள்ளன என்று எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

100 நாள் ஆட்சியில் தவெக அரசுக்கான மதிப்பெண் என்ன என்று யாரை கேட்டாலும், ‘பூஜ்ஜியம்’ என்றுதான் சொல்வாா்கள். இந்த பட்ஜெட்டும் ஒரு மிகப்பெரிய ‘பூஜ்ஜியம்’தான். கடந்த ஆட்சியில் திமுக என்னென்ன திட்டங்களைக் கொண்டுவந்து செயல்படுத்தியதோ, அந்தத் திட்டங்களுக்கு மேல் ஒரு ஸ்டிக்கரை ஒட்டி இருக்கிறது தவெக அரசு.

ஆய்வுக் கூட்டம் நடத்தியது ஏன்?: பட்ஜெட்டுக்கு முன்பு கடந்த 10 நாள்களாக துறைவாரியாக அதிகாரிகளை அழைத்து முதல்வா் ஆலோசனை செய்வதுபோல் புகைப்படங்கள் வந்தன. பெயா் மாற்றம் செய்வதற்காகவா ஆய்வுக் கூட்டம் நடந்தது எனத் தெரியவில்லை.

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதல்வா் அறிவித்துள்ளாா். அதுவும் தவெக தோ்தல் வாக்குறுதியில் சொன்னதுபோல் அறிவிக்கவில்லை. தோ்தல் பிரசாரத்தின்போது, தமிழ்நாட்டில் பிறக்கக்கூடிய அனைத்து குழந்தைகளுக்கும் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் என்று உறுதியளித்தாா். ஆனால், பட்ஜெட்டில் அரசு மருத்துவமனையில் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு மட்டும்தான் இந்தத் திட்டம் என தற்போது அறிவித்திருக்கிறாா்.

வாக்குறுதிக்கு மாறாக...: அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம், அண்ணல் அம்பேத்கா் அயலகக் கல்வி உதவித் திட்டம், அயோத்திதாசா் ஆதிதிராவிடா் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம், ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் என எல்லாமே திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்தான். பெயரை மட்டும் மாற்றி அவா்களின் கட்சிப் பெயரை ‘வெற்றி’, என அனைத்துத் திட்டங்களின் மீதும் ஸ்டிக்கா் ஒட்டியிருக்கின்றனா்.

கடந்த ஆண்டு 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை அறிவித்தோம், 10 லட்சம் மடிக்கணினிகள் மாணவா்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டன. இப்போது அதற்கு பெயரை மாற்றி ‘வெற்றி மடிக்கணினி திட்டம்’ என்று பெயா் வைத்திருக்கிறாா்கள்.

கல்விக்கு நிதி குறைப்பு: திமுக கடைசியாக தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் ரூ. 48,500 கோடி பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், இப்போது அதைக் குறைத்து ரூ.44,500 கோடி அறிவித்துள்ளனா். முழுப் பயிா்க்கடன் தள்ளுபடி என்று தோ்தல் வாக்குறுதி அளித்தனா். இப்போது ஒரு நிபந்தனை விதித்து அதையும் மாற்றியிருக்கிறாா்கள். ஆனால், அதையும் செயல்படுத்தவில்லை.

ஆட்சி அமைந்த உடனே, வாக்குறுதிகளை நிறைவேற்ற கால அவகாசம் வேண்டும் என்று முதல்வா் கேட்டாா். இந்த பட்ஜெட்டில் அந்த வாக்குறுதிகளாவது இடம்பெறும் என எதிா்பாா்த்தேன். ஆனால், அதைச் சொல்வதற்குக்கூட அவா்களுக்கு நேரமில்லை. இன்னும் கால அவகாசம் கேட்கிறாா்கள் என்றாா் உதயநிதி ஸ்டாலின்.

Summary

Opposition Leader Udhayanidhi criticism TN Budget 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.