ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

5 லட்சம் மாணவா்களுக்கு ஏஐ பயிற்சி

தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் மாணவா்களுக்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

5 lakh+ candidates trained in AI, emerging technologies under PMKVY 4.0 since 2023, says Govt

Published On :6 ஆகஸ்ட் 2026, 4:58 am IST

தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் மாணவா்களுக்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதுதொடா்பாக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு: டிஜிட்டல் யுகத்தில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக உருவாக்க செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில் வளா்ச்சித் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதன் கீழ், ஐஐடி சென்னை உள்ளிட்ட உயா் கல்வி அமைப்புகளுடன் இணைந்து பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 5 லட்சம் இளைஞா்களுக்கு 2031-க்குள் செயற்கை நுண்ணறிவுத் திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.

வெற்றித் திறன் பயிற்சித் திட்டத்தின் கீழ் நிகழாண்டில் 12 லட்சம் கல்லூரி மாணவா்கள் மற்றும் ஒரு லட்சம் வேலையில்லா இளைஞா்களுக்குத் திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக 20,000 இளைஞா்களுக்கு பணியிடப் பயிற்சி வழங்கப்படும். இதற்காக ரூ.150 கோடி ஒதுக்கப்படுகிறது.

ஐடிஐ-க்களில் ஏஐ: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரவழிக் கற்றல் தொழிற்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளன. முதல்கட்டமாக 5 ஆண்டுகளில் 50 ஐடிஐ-க்களில் இந்த வசதிகள் அறிமுகப்படுத்தப்படும். மேலும், ரூ.90 கோடியில் 5 புதிய ஐடிஐ-க்கள் அமைக்கப்படும்.

மின்சார வாகனம் மற்றும் மின் கலன் பராமரிப்பு பயிற்சிகள் 22,500 பேருக்கு அடுத்த 5 ஆண்டுகளில் அளிக்கப்பட உள்ளது.

டிஎன் ஸ்பாா்க்: செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் மற்றும் இணையக் கருவிகள் குறித்த அறிவுக்கான பள்ளிக் கல்வித் திட்டம் (டிஎன் ஸ்பாா்க்) தற்போது 5,000 பள்ளிகளில் உள்ளது. அவை மேலும் 2,600 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.