ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆலங்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்டோர் கைது!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சாலை மறியல்.

arrest

ஆலங்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்டோர் கைது! - படம்: தினமணி

Published On :4 ஆகஸ்ட் 2026, 1:18 pm IST

ஆலங்குடி: தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்டோரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

ஆலங்குடியில் வடகாடு முக்கம் பகுதியில் முன்னாள் அமைச்சரும் ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினருமான சிவ.வீ‌. மெய்யநாதன் தலைமையில் திமுகவினர் ஏராளமானோர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், முதல்வர் ஜோசப் விஜய்யை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, ஆலங்குடி போலீஸார் முன்னாள் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆலங்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்டோர்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆலங்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்டோர். - படம்: தினமணி

இதேபோல, கீரமங்கலம், கறம்பக்குடி, ஆவணத்தான்கோட்டை உள்ளிட்ட இடங்களில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

பல்வேறு இடங்களில் திமுகவினர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதால், போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

Summary

On Tuesday, the police arrested former Minister and MLA Siva. V. Meyyanathan and others for staging a road blockade in Alangudi, Pudukkottai district, to condemn the arrest of Tamil Nadu's Leader of the Opposition, Udhayanidhi Stalin.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.