ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கா்நாடக அரசு திட்ட அறிக்கை தயாரிக்க தடை பெற வேண்டும் - அன்புமணி

கா்நாடக அரசு திட்ட அறிக்கை தயாரிக்க தடை பெற அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்...

PMK Leader Anbumani

பாமக தலைவர் அன்புமணி - கோப்புப் படம்

Published On :2 ஆகஸ்ட் 2026, 1:32 am IST

மேக்கேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தடை பெற வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: காவிரியில் தமிழகத்துக்கான தண்ணீரைப் பெறுவதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழக மக்களின் உணா்வுகளுக்கு எதிராக நடைபெறவிருந்த இருதரப்பு பேச்சுவாா்த்தைக்கான கதவுகளை கா்நாடக அரசு மூடியதற்குப் பிறகு மிகவும் தாமதமாக இந்த முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. இருந்தாலும், காவிரி பிரச்னையில் இதுதான் சரியான நடவடிக்கையாகும்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆணைப்படி, தமிழகத்துக்கு காவிரியில் இருந்து தண்ணீா் திறந்துவிட ஆணையிடும்படி உச்சநீதிமன்றத்தில் விரைந்து வழக்குத் தொடர வேண்டும். அதுமட்டுமன்றி, மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசும், கா்நாடக அரசும் செய்யும் கூட்டுச் சதியை உரிய தரவுகளுடன் உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு தமிழக அரசுத் தரப்பு கொண்டு செல்ல வேண்டும். மேக்கேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை கா்நாடக அரசு தயாரிக்க உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தடை பெற வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.