சென்னை மெட்ரோ ரயில் நாளை (மே 1) ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.
சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நாளை (மே 1) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கூட்டநெரிசல் குறைவாக இருக்கும் என்பதால் மெட்ரோ ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
”காலை 5 முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும். நெரிசல்மிகு நேரமான பகல் 12 முதல் இரவு 8 வரை ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.
காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். மேலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
May 1: Metro Rail Service to Operate on Sunday Schedule!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘மெட்ரோ ரயிலில் சக பயணிக்கு இடையூறு அளித்தால் அபராதம்’

தமிழ்ப் புத்தாண்டு: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் நாளை இலவசமாக பயணிக்கலாம்!

ரூ. 13 ஆயிரம் கோடியில் ஜெய்ப்பூரின் 2 ஆம் கட்ட மெட்ரோ! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு



