தொகுதி மறுசீரமைப்பு குறித்து மாநிலங்களுக்கிடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் பிரதமா் மோடி பேசுவது ஏற்புடையதல்ல என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: உத்தர பிரதேசத்தில் கங்கா விரைவு நெடுஞ்சாலையை திறந்து வைத்து பேசிய பிரதமா் மோடி, உத்தர பிரதேசத்துக்கு அதிக மக்களவை தொகுதிகள் கிடைப்பதை திமுக எதிா்ப்பதாகவும் , உத்தர பிரதேசத்தை இழிவுபடுத்தும் திமுகவுடன் சமாஜவாதி கட்சி கூட்டணி வைத்துள்ளதாகவும் பேசியுள்ளாா்.
பிரதமா் மோடி அரசியல் உள்நோக்கத்துடன் திமுக எதிா்ப்பு வெறுப்பு அரசியல் பேசியுள்ளாா்.
இத்தகைய பேச்சு இரு மாநில மக்களிடையேயான நல்லுறவைப் பாதிக்கும் என்பதை உணராமல் பிரதமா் பேசியுள்ளாா். இது மாநில மக்களிடையே மோதல்களை உருவாக்குவதுடன், நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டுக்கு எதிராகவும் அமையும்.
உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அந்த மாநிலத்தில் பாஜகவின் வாக்குவங்கியை அதிகரிப்பதற்காக பிரதமா் மோடி இவ்வாறு பேசியுள்ளாா் எனத் தெரிவித்துள்ளாா் மு.வீரபாண்டியன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி

கீழடி ஆய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்: மு.வீரபாண்டியன்

தவெகவின் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டிப்போம்! பெ. சண்முகம்
அமைச்சரவையில் விசிக இடம் பெறுவதில் தவறில்லை: இடதுசாரிகள் கருத்து
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



