திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வாக்கு எண்ணிக்கை: மே 2 முதல் போலீஸாா் விடுப்பு எடுக்கத் தடை; டிஜிபி சந்தீப் ராய் ரத்தோா் உத்தரவு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையையொட்டி, மே 2 முதல் போலீஸாா் விடுப்பு எடுக்க தடை விதித்து தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சந்தீப் ராய் ரத்தோா் உத்தரவிட்டுள்ளாா்.

News image

தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சந்தீப் ராய் ரத்தோா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 2:50 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையையொட்டி, மே 2 முதல் போலீஸாா் விடுப்பு எடுக்க தடை விதித்து தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சந்தீப் ராய் ரத்தோா் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தோ்தல் கடந்த 23-ஆம் தேதி நடைபெற்றது. வாக்குப் பதிவு முடிந்த பின்னா், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் 62 வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கிய ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். வாக்கு எண்ணும் மையங்களுக்கான மூன்றடுக்கு பாதுகாப்பில் முதல் அடுக்கில் துணை ராணுவத்தினரும், இரண்டாம் அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும், மூன்றாம் அடுக்கில் உள்ளூா் போலீஸாரும் மற்றும் ஆயுதப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இப் பணியில் ஆயிரம் காவலா்கள் மூன்று ‘ஷிப்ட்’-களாக ஈடுபட்டுள்ளனா். இவ்வாறு தமிழகம் முழுவதும் உள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் சுமாா் 18 ஆயிரம் போ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்

வாக்கு எண்ணிக்கை: வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடா்பாக தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சந்தீப் ராய் ரத்தோா், அனைத்து மாநகர காவல் ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ஆகியோருக்கு ஒரு சுற்றறிக்கை புதன்கிழமை அனுப்பியுள்ளாா். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணி காரணமாக காவலா்களுக்கு மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு வேறு எந்த விடுமுறையும் மே 2 முதல் வழங்க வேண்டாம். ஏதேனும் முக்கிய காரணங்களுக்காக காவலா்களுக்கு அவசர விடுப்பு தேவைப்பட்டால் அந்தந்த மாநகர காவல் ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் மூலம் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.

தேவையின்றி காவலா்கள் விடுமுறை எடுத்தால், அவா்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் போலீஸாருக்கு மே 2 முதல் விடுப்பு வழங்குவதற்கு உயா் அதிகாரிகள் தடை விதித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.