வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலைக்கு 11,823 பேருந்துகள் இயக்கம்!

சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது தொடர்பாக...

News image

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலைக்கு 11,823 பேருந்துகள் இயக்கம்! - கோப்புப்படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 10:31 am

சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ஏப். 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாளை (ஏப். 30) இரவு 9.50 மணி முதல் மே 1 ஆம் தேதி இரவு 11.07 வரை சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு ஏப். 30 முதல் மே 2 வரை சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து ஏப். 30 அன்று 548 பேருந்துகளும், மே 1 அன்று 565 பேருந்துகளும் மற்றும் மே 2 அன்று 35 பேருந்துகளும் சென்னை மாதவரத்திலிருந்து ஏப். 30 அன்று 186 பேருந்துகளும் மே 1 அன்று 174 பேருந்துகளும் மற்றும் சென்னை அடையாரிலிருந்து ஏப். 30 அன்று 55 பேருந்துகளும் மே 1 அன்று 50 பேருந்துகளும் தினசரி இயக்ககூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். சென்னை கோயம்பேட்டிலிருந்தும் இயக்கப்படும்.

ஆக, சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு ஏப். 30 முதல் மே 2 வரை 11,823 பேருந்துகள் தினசரி இயக்ககூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு மே 1 அன்று இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், மதுரை, சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

In observance of Chitra Pournami, special buses will be operated from Chennai to Tiruvannamalai on April 30 and May 1.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.