மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

வெப்ப அலை: அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு அமைக்க சுகாதாரத் துறை உத்தரவு!

வெப்ப அலை பாதிப்பைத் தடுக்க அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...

News image

கோப்புப் படம் - ENS

Updated On :27 ஏப்ரல் 2026, 8:09 am

தமிழ்நாட்டில் வெப்ப அலையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகமாக இருந்து வருவதால் மக்கள் பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நீர்ச்சத்து இழப்பு, ஹீட் ஸ்ட்ரோக் போன்ற பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டும் முறையாக சிகிச்சை அளிக்கும்பொருட்டும் அரசு மருத்துவமனைகளில் 'ஹீட் ஸ்ட்ரோக்' என்ற பெயரில் சிறப்பு வார்டு அமைக்க சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

அதேபோல வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க, தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ORS (உப்புச் சர்க்கரை கரைசல்) தடையின்றி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல விவசாய கூலித் தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓஆர்எஸ் கரைசல் வழங்க வேண்டும் என்றும் அரசு மருத்துவமனைகளில் ஒஆர்எஸ் கரைசலை பொதுமக்கள் இலவசமாக வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள், இதுதொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Summary

Heatwave: Health Department Orders Establishment of Special Wards in Govt Hospitals

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.