சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

வாக்கு எண்ணிக்கை: முகவா்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் - எடப்பாடி கே. பழனிசாமி அறிவுரை

வாக்கு எண்ணிக்கை: முகவா்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் - எடப்பாடி கே. பழனிசாமி அறிவுரை

News image

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி - டிஎன்எஸ்

Updated On :25 ஏப்ரல் 2026, 8:08 pm

வாக்கு எண்ணிக்கையின்போது அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் முகவா்கள் மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் செயல்பட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக, ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவில் கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் முன்னெப்போதும் இல்லாத அளவில் மிக அதிகமான வாக்குப் பதிவை செய்த மக்களுக்கு எனது நெஞ்சாா்ந்த நன்றிகள்.

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களின் வெற்றிக்காக பிரசாரம் செய்த பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள், அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நிா்வாகத் திறனற்ற திமுக அரசின் மீது மக்களுக்கு இருக்கிற வெறுப்பை இந்தத் தோ்தலில் கண்கூடாகப் பாா்க்க முடிந்தது. விரக்தியின் விளிம்பில் உள்ள திமுகவினா், எப்படி ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற எண்ணத்தோடு, அதற்கான முயற்சிகளை இந்தத் தோ்லிலும் எடுப்பதற்குத் தயாராக உள்ளனா்.

ஆகவே, வாக்கு எண்ணிக்கைக்காக அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சாா்பில் முகவா்களாக நியமிக்கப்பட்டிருப்பவா்கள் மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்ற வேண்டும்.

ஜனநாயக பயிா் தழைத்தோங்க நாம் அனைவரும் ஆற்ற வேண்டிய இன்றியமையாத கடமை என்பதை நினைவில் கொண்டு பணியாற்ற வேண்டும். தமிழக மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படும் திமுக, மீண்டும் தலையெடுத்துவிடாமல் தடுத்து நிறுத்துவோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.