தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

தமிழகத்தில் முதல்வர் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளின் வாக்கு சதவீதம் குறித்து...

News image

ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி - விஜய் - சீமான். - கோப்புப்படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 3:33 am

தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் வியாழக்கிழமையில் ஒரே கட்டமாக காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணியளவில் முடிவடைந்தது. இந்தத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 85 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தேர்தலில் முதல்வர் வேட்பாளர்களாகப் போட்டியிட்டோரின் தொகுதிகளில் வாக்கு சதவிகிதம் எவ்வளவு?

முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், சென்னை கொளத்தூரில் போட்டியிட்டார். கடந்த தேர்தலில் பெருவாரியான வாக்குகளில் வெற்றி பெற்ற மு.க. ஸ்டாலினின் தொகுதியில், இம்முறை 83.58 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் மற்றும் முதன்மை எதிர்க்கட்சியுமான அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். இம்முறை இந்தத் தொகுதியில் 89.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் 71.88 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. முதல்வர் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறைந்த அளவிலான வாக்குப்பதிவு பெற்ற தொகுதியாக காரைக்குடி உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். விஜய் போட்டியிட்ட பெரம்பூரில் 86.72 சதவீதமும், திருச்சி கிழக்கில் 79.32 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

Summary

TN Polls 2026: Vote Percentage in the Constituencies of Chief Ministerial Candidates

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.