தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

முதல்முறை வாக்காளர்களே.. வாக்களிப்பது எப்படி என அறிய ஆவலா?

முதல்முறை வாக்காளர்கள், வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களிப்பது எப்படி என அறிய...

News image

மின்னணு வாக்கு இயந்திரத்தில் வாக்களிப்பது எப்படி?

Updated On :22 ஏப்ரல் 2026, 9:40 am

முதல்முறை வாக்காளர்கள், வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களிப்பது எப்படி என்பது அறிந்துகொண்டு செல்வது நல்லது.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்.23) நடைபெறவிருக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். 6 மணிக்குப் பிறகு, வரிசையில் நின்றிருப்பவர்களுக்கு மட்டும் டோக்கன் கொடுக்கப்பட்டு, அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படும்.

முதல் முறை வாக்காளர்கள், வாக்காளர் அடையாள அட்டை அல்லது புகைப்படத்துடன் கூடிய அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையுடன் பூத் ஸ்லிப் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும்.

முதல் முறை வாக்காளர்கள் தங்களுடைய வாக்குச்சாவடியை அறிந்து கொண்டு வீட்டிலிருந்து புறப்படலாம்.

கையில் டிஜிட்டல் கேமரா, செல்போன் போன்றவற்றை எடுத்துச் செல்லக் கூடாது.

வாக்குச்சாவடியில், உங்களுக்குரிய வரிசையில் நின்று வாக்களிக்க வேண்டும்.

வாக்குச்சாவடிக்குள் இருக்கும் அதிகாரியிடம் வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். அதிலிருக்கும் எண்ணைக் கொண்டு வாக்காளர் பட்டியலில் இருக்கும் உங்கள் பெயரை அடையாளம் காண்பார்.

பிறகு, அங்குள்ள ஊழியர்கள் வாக்காளரின் இடதுகை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைப்பார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இருக்கும் இடத்துக்குச் செல்லஅனுமதி வழங்கப்படும்

அங்கு, வாக்குப்பதிவு இயந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறீர்களோ, அவர்களது பெயர், சின்னம் இருக்கும் இடத்துக்கு நேராக உள்ள நீல நிற பொத்தானை அழுத்தவும்.

அல்லது நோட்டாவுக்கு வாக்களிக்க விரும்பினால், வாக்குப்பதிவு இயந்திரத்தின் கடைசியில் இருக்கும் நோட்டாவுக்கு அருகே உள்ள நீல நிற பொத்தானை அழுத்தலாம்.

நீல நிற பொத்தானுக்கு அருகே உள்ள சிவப்பு நிற விளக்கு ஒளிரும். அதனை பார்த்துக் கொள்ளவும்.

பிறகு, வாக்குச்சதிவு இயந்திரத்துக்கு அருகே வைக்கப்பட்டிருக்கும் விவிடிபேடில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பது சின்னத்துடன் ஒரு துண்டுத் தாளில் காட்டப்படும்.

ஒரு கண்ணாடி பெட்டிக்குள் அந்த துண்டு வெறும் 7 வினாடிகள் மட்டுமே காட்டப்படும்.

அடுத்து வாக்குப்பதிவு நிறைவு பெற்றதைக் குறிக்கும் வகையில் ஒலி உருவாகும். நீங்கள் வாக்குப்பதிவை நிறைவு செய்துவிட்டீர்கள் என்ற அர்த்தமாகும்.

தற்போது முதல் முறையாக, வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்காளர்களின் வண்ணப் புகைப்படங்கள் இடம்பெற உள்ளது. எனவே, வாக்காளர்களுக்கு இது எளிதாக அமையும்.

Summary

First-time voters, learn how to go inside the polling station and vote...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.