தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஜனநாயகக் கடமை! சென்னை திரும்பினார் அஜித் குமார்!

நடிகர் அஜித் குமார் சென்னை திரும்பியது பற்றி...

News image

சென்னை விமான நிலையத்தில் அஜித் குமார் - X

Updated On :22 ஏப்ரல் 2026, 11:22 am

தமிழ்நாட்டில் நாளை வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில், துபையில் இருந்து நடிகர் அஜித் குமார் சென்னை திரும்பியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் நாளை (ஏப். 23) ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுக, அதிமுக இடையே இருமுனைப் போட்டி நிலவி வந்தது.

இந்த தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடும் நிலையில், மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், துபையில் தங்கி கார் பந்தயங்களில் பங்கேற்று வரும் நடிகர் அஜித் குமார், வாக்களிப்பதற்காக இன்று அதிகாலை சென்னை திரும்பியுள்ளார்.

ஒவ்வொரு தேர்தலில் காலை முதல் ஆளாக வரிசையில் நின்று தவறாமல் நடிகர் அஜித் குமார் தனது வாக்கை செலுத்தி வருகிறார்.

சென்னை திருவான்மியூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடியில் நாளை காலை அஜித் குமார் வாக்கு செலுத்தவுள்ளார்.

நடிகர் அஜித் குமார் சில மாதங்களுக்கு முன்னதாக அஜித் குமார் ரேஸிங் அணி என்ற கார் பந்தய அணியை தொடங்கி பல்வேறு நாடுகளில் நடைபெறும் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார்.

துபையில் தனது கார் பந்தய அணி வீரர்களுடன் தங்கி தொடர் பயிற்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்று வரும் அஜித், கடைசியாக பெல்ஜியத்தில் நடைபெற்ற பந்தயத்தில் இரண்டாம் இடம் பிடித்தார்.

அஜித் குமாரின் 64 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சற்று தாமதமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Democratic Duty! Ajith Kumar Returns to Chennai!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.