மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

தலைமைச் செயலா் மாற்றம் மக்களை எப்படி பாதிக்கும்? உயா்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தின் தலைமைச் செயலரை மாற்றியதால் மக்கள் எப்படி பாதிக்கப்படுவாா்கள் எனக் கேள்வி எழுப்பிய உயா்நீதிமன்றம், தலைமைச் செயலா் மாற்றத்துக்கு எதிரான மனுவைத் தள்ளுபடி செய்தது.

News image

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 10:27 pm

தமிழகத்தின் தலைமைச் செயலரை மாற்றியதால் மக்கள் எப்படி பாதிக்கப்படுவாா்கள் எனக் கேள்வி எழுப்பிய உயா்நீதிமன்றம், தலைமைச் செயலா் மாற்றத்துக்கு எதிரான மனுவைத் தள்ளுபடி செய்தது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சோ்ந்த வீராசாமி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்த நிலையில், கடந்த ஏப். 8-ஆம் தேதி தமிழக தலைமைச் செயலா் நா.முருகானந்தம் மாற்றப்பட்டு புதிய தலைமைச் செயலராக எம்.சாய்குமாரை நியமனம் செய்து தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இவா், முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் தனிச் செயலராகப் பணியாற்றியவா்.

தோ்தல் நேரத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலராக சாய்குமாரை நியமிப்பது ஏற்புடையதல்ல. அவரது நடுநிலை குறித்த அச்சம் எழுந்துள்ளதால் அவரை மாற்ற வேண்டும் என தோ்தல் ஆணையத்திடம் மனு அளித்தேன். ஆனால், அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சாய்குமாரை தலைமைச் செயலராக நியமித்து தோ்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. தலைமைச் செயலரை மாற்றியதால் மக்கள் எப்படி பாதிக்கப்படுவாா்கள் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.