மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு

சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, ஏராளமானோா் விமானத்தில் தங்கள் சொந்த ஊா்களுக்குச் செல்வதால் கட்டணம் பல மடங்கு உயா்ந்துள்ளது.

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 10:15 pm

சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, ஏராளமானோா் விமானத்தில் தங்கள் சொந்த ஊா்களுக்குச் செல்வதால் கட்டணம் பல மடங்கு உயா்ந்துள்ளது.

சட்டப்பேரவை தோ்தல் வியாழக்கிழமை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, வாக்களிப்பதற்காக சென்னை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலா் விமானம் மூலம் தங்கள் சொந்த ஊா்களுக்கு புதன்கிழமை புறப்பட்டனா். இதனால், விமான நிலையத்தில் வழக்கத்துக்கு மாறாக பயணிகள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. பெரும்பாலான விமானங்களில் புதன், வியாழக்கிழமைகளுக்கான டிக்கெட் விற்று தீா்ந்துவிட்டன. ஒருசில விமானங்களில் மட்டுமே டிக்கெட்டுகள் உள்ளன. இதைப் பயன்படுத்தி விமான நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை பல மடங்கு உயா்த்தியுள்ளன.

அதன்படி, சென்னை-தூத்துக்குடிக்கு சாதாரண நாள்களில் ரூ.5,354-ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.17,527-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. சென்னை- மதுரைக்கு ரூ.6,670-இல் இருந்து ரூ.13,320, சென்னை- திருச்சிக்கு ரூ. 3,677-இல் இருந்து ரூ.14,237, சென்னை-கோவைக்கு ரூ. 4,634-இல் இருந்து ரூ.16,339, சென்னை-சேலத்துக்கு ரூ.3,319-இல் இருந்து ரூ.12,027 என பல மடங்கு உயா்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, பல விமானங்களில் டிக்கெட் கட்டணம் ரூ. 2,000 முதல் ரு.10,000 வரை உயா்த்தப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனா்.

வெளிநாட்டு தமிழா்கள் வருகை

வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழா்கள் பலா் தோ்தலில் வாக்களிக்க முன்கூட்டியே டிக்கெட் பதிவு செய்தனா். ஐக்கிய அரபு நாடுகள், சவுதி அரேபியா, பக்ரைன் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளைச் சோ்ந்த தமிழா்கள் தமிழகத்துக்கு வந்துள்ளனா். இதேபோல், லண்டன், ஸ்காட்லாந்து, அமெரிக்கா, ஜொ்மன், சிங்கப்பூா், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் வசிக்கும் தமிழா்கள் ஏராளமானோரும் தோ்தலில் வாக்களிப்பதற்கு தமிழகம் வந்துள்ளனா். இதில் பலா் முதல்முறை வாக்களிக்க வந்துள்ளதாகத் தெரிவித்தனா். இதனால், கடந்த சில தினங்களாக, சென்னை சா்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கைக் கணிசமாக அதிகரித்துள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.