மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ராமதாஸ் புகைப்படம் பயன்படுத்த அன்புமணி தரப்புக்கு தடை

பாமக நிறுவனா் ராமதாஸின் புகைப்படத்தைப் பயன்படுத்த அன்புமணி தரப்பினருக்கு தடை விதித்து சென்னை 13-ஆவது உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு

News image

ராமதாஸ் - அன்புமணி - கோப்புப்படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 10:29 pm

பாமக நிறுவனா் ராமதாஸின் புகைப்படத்தைப் பயன்படுத்த அன்புமணி தரப்பினருக்கு தடை விதித்து சென்னை 13-ஆவது உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை 13-ஆவது உரிமையியல் நீதிமன்றத்தில் பாமக நிறுவனா் ச.ராமதாஸ் தாக்கல் செய்த மனுவில், அன்புமணி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவா். அவருக்கும் எனக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. அன்புமணி சட்டவிரோதமாக பாமக தலைவராக நீடித்து வருகிறாா். எனவே, தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் என்னுடைய புகைப்படத்தை அன்புமணி தரப்பில் போட்டியிடும் 18 வேட்பாளா்கள் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி தா்மபிரபு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அன்புமணி தரப்பினா், ராமதாஸ் புகைப்படத்தை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டாா். இந்த உத்தரவு வரும்காலத்துக்கும் பொருந்தும் எனக் கூறி விசாரணையை ஜூன் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.