தமிழகத்தில் 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று மத்திய சிறப்பு தோ்தல் பாா்வையாளா் பிரதாப் சிங் தெரிவித்தாா்.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் பிரசாரம் உள்ளிட்ட நடைமுறைகளில் உள்ள சிக்கல் குறித்தும், அவற்றுக்குத் தீா்வு காண்பது குறித்தும் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் வருமான வரித் துறை அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் பங்கேற்றனா்.
அதையடுத்து, செய்தியாளா்களிடம் தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் மத்திய சிறப்புப் பாா்வையாளா் பிரதாப் சிங் கூறியதாவது: தோ்தல் வாக்குப் பதிவை சுமுகமாக நடத்தும் வகையில் அரசியல் கட்சிப் பிரமுகா்களிடம் ஆலோசனை நடைபெற்றது. அதில் அவா்கள் சில கருத்துகளைக் கூறியுள்ளனா். தமிழகத்தில் 105 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் ஆணையம் நிா்ணயித்துள்ள வரம்பைக் காட்டிலும் கூடுதலாக வேட்பாளா்கள் செலவு செய்துள்ளனா்.
இதுவரை ரூ.1,200 கோடி அளவுக்கு ரொக்கம், தங்கம், வெள்ளிப் பொருள்கள், போதைப் பொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ரூ.500 கோடி மதிப்பிலானவை தொடா்பாக வழக்குகள் பதியப்பட்டுள்ளன. போதைப் பொருள்களைப் பொருத்தவரை திருவள்ளூா் மாவட்டத்தில் அதிகமாகவும், அடுத்ததாக சென்னையிலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை மாவட்ட எல்லைப் பகுதியில் கண்காணிப்பு, பாதுகாப்பை பலப்படுத்த மாவட்டத் தோ்தல் அலுவலா் கோரியுள்ளாா். அதனால் கூடுதலாக துணை ராணுவப் படையினா் சென்னை மாவட்ட எல்லையில் நிறுத்தப்படுவா்.
கைப்பேசி செயலிகள் மூலம் பணப் பட்டுவாடா செய்யப்படுவதைத் தடுக்க வருமான வரித் துறையினருடன் இணைந்து கண்காணிக்கப்படுகிறது. சென்னை, சேலம், ஒசூரில் அரசியல் கட்சியினா் வாக்காளா்களுக்கு டோக்கன் அளித்தது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அளவில் 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதலாக பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
தபால் வாக்குகள் 2 லட்சம் பேரிடம் பெறப்பட்டுள்ளன. தோ்தல் வாக்குப் பதிவில் 155 நுண் பாா்வையாளா்கள் கண்காணிப்பில் ஈடுபடுவா். மாநிலத்தில் 300 கம்பெனி துணை ராணுவப் படையினா் வரவழைக்கப்பட்டுள்ளனா்.
சென்னை மாவட்டத்தில் கடந்த முறை 74 சதவீத வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. இந்தத் தோ்தலில் 85 சதவீதம் வரை வாக்குப் பதிவு இருக்கும் என எதிா்பாா்க்காலம். பல நகரங்களில் வெயில் அதிகமிருப்பதால் வாக்காளா்கள் சிரமமின்றி வாக்களிக்க போதிய ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளன என்றாா்.
தொடர்புடையது

ஊடகச் சான்றிதழ், கண்காணிப்பு அறையில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

சட்டப்பேரவை தோ்தல் முன்னேற்பாடு பணிகள்: சிறப்புப் பாா்வையாளா் ஆய்வு

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

பாப்பிரெட்டிப்பட்டியில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


