உங்களுடைய படைவீரனாக எப்போதும் இருப்பேன் என்று நான்குனேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.
நான்குனேரி சுங்கச்சாவடி அருகே நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி ஆர். மனோகரன் உள்ளிட்ட திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:
”விருதுநகர் பட்டாசு ஆலை தீ விபத்தில் பலியான குடும்பங்களுக்கு என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய அரசியலமைப்புச் சாசனம் இந்தியாவின் மாநிலங்களை, மாநிலங்களின் கூட்டமைப்பாக வரையறை செய்துள்ளது. மாநிலங்கள் பெரிய அளவில் இருந்தாலும், சிறிய அளவில் இருந்தாலும் ஒரே மாதிரியான மரியாதையையும் உரிமையையும் பெற்று இருக்கின்றன. அவர்கள் சமமாக ஒரே மேசையில் அமர்ந்து பேசக்கூடிய செல்வாக்கையும் பெற்று இருக்கிறார்கள்.
ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு கலாசாரமும் ஒவ்வொரு மொழியும் தனது வருங்காலத்திற்கான கனவுகளை தாங்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும், அதற்கான உரிமை அவர்களிடம் இருக்கிறது. அரசியல் சாசனம் இந்த உரிமைகளை உறுதி செய்கிறது.
தமிழ் நாகரிகம் என்பது உலகின் மிக மிக தொன்மையான நாகரிகங்களில் ஒன்று. தற்போது, பாஜக இந்தியாப் பற்றிய புதிய திட்டத்தைக் கொண்டிருக்கிறது. அவர்கள் ஒரு தேசம், ஒரு மொழி, ஒரு வரலாறு, ஒரு சித்தாந்தம் என்று வெளிப்படையாகவே பேசுகிறார்கள்.
இந்தியாவில் ஒரே ஒரு வரலாறுதான் இருக்குமே ஆனால், தமிழ் மொழியின் வரலாறு எங்கு இருக்கிறது. கர்நாடக மக்களின் வரலாறு எங்கு இருக்கிறது. மகாராஷ்டிரம், மணிப்பூர் மக்களின் வரலாறு எங்கு இருக்கிறது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களின் வரலாறும், தங்களுக்கு அடிபணிய வேண்டும் என்றும், தங்களின் சித்தாந்தத்திற்கு கீழ் சிதைக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது இரு சித்தாந்தத்திற்கு இடையேயான போரட்டமாக உருவெடுத்துள்ளது.
உங்களுடைய சகோதரனாகவும் உங்களுடைய படைவீரனாகவும் நான் எப்போதும் தில்லியில் இருப்பேன், உங்களுக்கு எதைச் செய்ய வேண்டும் என்று சொன்னால் மட்டும் போதும். என்ன நடந்தாலும் சரி, தமிழ் இனத்தையும் தமிழ் மொழியையும் தமிழ் வரலாற்றையும் தமிழ் பாரம்பரியத்தையும் நான் காப்பேன்” என்றார்.
Summary
Speaking at a public meeting held in Nanguneri, Rahul Gandhi stated that he would always remain their soldier.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
காமராஜர், திமுக அரசின் திட்டங்கள் பற்றிப் பேசிய ராகுல் காந்தி!
எதிர்க்கட்சித் தலைவர்களைவிட வளர்ப்பு நாய்க்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரா ராகுல்?
டிரம்ப்புக்கு மோடி; அதுபோல தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு கூட்டாளி முதல்வர் தேவை! ராகுல் பேச்சு
மோடி ஒரு மாயாஜாலக்காரர்! ஆபரேஷன் சிந்தூர் போன்ற வித்தைகளை செய்தவர்! ராகுல் பேச்சு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


