வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததில் 9 பேர் பலியான சம்பவத்துக்கு குடியரசுத்தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கேரளம் மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 16 பேர் சுற்றுலா வேனில் புதன்கிழமை (ஏப்.15) கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
வால்பாறை முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு வெள்ளிக்கிழமை (ஏப்.17) மாலை பொள்ளாச்சி வழியாக கேரளம் செல்வதற்காக வேனில் வந்து கொண்டிருந்தபோது வால்பாறை மலைப்பாதையில் உள்ள 13-வது கொண்டை ஊசி வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தடுப்பு சுவரில் மோதி 800 அடி வனப்பகுதியில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து 11-வது கொண்டை ஊசி வளைவில் விழுந்து நொறுங்கியதில் 9 பேர் பலியாகினர்.
இந்த சம்பத்துக்கு இரங்கல் தெரிவித்த குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தன்னுடைய 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:
“தமிழகத்தின் கோவையில் நிகழ்ந்த துயரமான சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் நான் மிகுந்த வேதனையடைந்துள்ளேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
The President has expressed condolences over the incident in Valparai, in which nine people lost their lives after a van plunged into an 800-foot gorge.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்! சுற்றுலாப் பயணிகள் 7 பேர் பலி!!

மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி

தவெக பிரசாரத்துக்கு வந்த வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 7 போ் பலத்த காயம்

கொடைக்கானலில் பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



