பொள்ளாச்சி அருகே வால்பாறையில் தடுப்புச் சுவரில் மோதி பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததில் 7 பேர் பரிதாபமாக பலியாகினர்.
கேரள மாநிலம் மலப்புரம் பகுதி சேர்ந்த 16 பேர் சுற்றுலா வேனில் நேற்றுமுன்தினம் (ஏப். 15) கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
வால்பாறை முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு இன்று (ஏப்.17) மாலை பொள்ளாச்சி வழியாக கேரளம் செல்லவதற்காக வேனில் வந்து கொண்டிருந்தபோது வால்பாறை மலைப்பாதையில் உள்ள 13-வது கொண்டை ஊசி வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தடுப்பு சுவரில் மோதி 800 அடி வனப்பகுதியில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து 11-வது கொண்டை ஊசி வளைவில் விழுந்து நொறுங்கியது.
இந்தக் கோர விபத்தில் வேனில் இருந்த 16 பேரில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அந்த வேனில் இருந்த 8 பேர் படுகாயங்களுடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் கடுமையாகச் சேமடைந்த வேனனை மீட்கும் பணியில் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சுற்றுலா வேனில் வந்தவர்கள் கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி சேர்ந்த ஆசிரியர்கள் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
Seven people tragically lost their lives when a van crashed into a retaining wall and plunged into a gorge in Valparai, near Pollachi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வால்பாறையில் வேன் கவிழ்ந்ததில் 9 பேர் பலி: குடியரசுத்தலைவர் இரங்கல்

தவெக பிரசாரத்துக்கு வந்த வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 7 போ் பலத்த காயம்

கொடைக்கானலில் பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழப்பு

மாஞ்சோலையில் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி: 6 போ் பலத்த காயம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


