லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அதிமுக முன்னாள் அமைச்சா் சரணடைய அவகாசம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத ஆற்று மணல் வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சரணடைய உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியது.

News image

எம்.ஆர். விஜயபாஸ்கர்

Updated On :17 ஏப்ரல் 2026, 11:16 am

உரிய ஆவணங்களின்றி சட்டவிரோத ஆற்றுமணல் வைத்திருந்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் சரண் அடைவதற்கான கால அவகாசத்தை வரும் ஏப்.28 வரை நீட்டித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உரிய ஆவணங்களின்றி சட்டவிரோத ஆற்றுமணல் வைத்திருந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கருக்கு எதிராக கரூா் நகர போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கில் எம்.ஆா்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன்பிணை வழங்கிய கரூா் மாவட்ட அமா்வு நீதிமன்றம், குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் சரண் அடைய உத்தரவிட்டது.

இதற்கான கெடு கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் சரண் அடைவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி எம்.ஆா்.விஜயபாஸ்கா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது எம்.ஆா்.விஜயபாஸ்கா் தரப்பில், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மனுதாரா் கரூா் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடுகிறாா். மாா்ச் 31-ஆம் தேதி மகாவீா் ஜெயந்தி என்பதால் அன்றைய தினம் நீதிமன்றம் விடுமுறை. இதனால், நீதிமன்றத்தில் சரண் அடைய முடியவில்லை. எனவே, சரண் அடைவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, நிபந்தனை முன்பிணை உத்தரவுப்படி, சரண் அடைவதற்கான கால அவகாசத்தை வரும் ஏப்.28 வரை நீட்டித்து உத்தரவிட்டாா். மேலும், ஏப்.29, 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் மனுதாரா் காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்து உத்தரவிட்டாா்.

Summary

The High Court has granted time to former minister M.R. Vijayabaskar to surrender in the illegal river sand case.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.